Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உறுதி உறுதி அதிமுகவிற்கு ஆதரவாக வீசத் தொடங்கிய அலை! பதற்றத்தில் திமுக!

விரைவில் தமிழகத்திற்கு சட்டசபைத் தேர்தல் வரவிருப்பதால் தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கூட்டணிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு சிலர் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள் இப்படி தேர்தலுக்கான வேலை மிக ஜரூராக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வன்னியர்களுக்கு அதிமுக அரசு கொடுத்து இருக்கின்ற 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக நம்முடைய ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் 121 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றியடைய பாடுபடுவோம் என்று ஒரு மடலை எழுதியிருக்கின்றார் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு.

அந்த மடலில் அவர் தெரிவித்திருப்பதாவது, என் பாட்டாளி சொந்தங்களே தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவித்தகி விட்டது. வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு இன்னும் 10 தினங்கள் மட்டுமே இருக்கின்றன. அதன்பிறகு மனுத்தாக்கல் முடிவடைந்த பின்னர் பரிசீலனை செய்யப்பட்ட வேட்பு மனுக்களை திரும்ப பெற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கு இன்னும் இருபது தினங்கள் மட்டுமே இருக்கின்றது. அதன் பிறகு தேர்தல் பரப்புரை தீவிரமடையும் இவையெல்லாம் சாதாரண தினங்களில் சராசரியான அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே ஒத்து வரக்கூடிய விஷயங்களாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் நமக்கு இது சாதாரண நேரமும் கிடையாது, நம் கட்சி சாதாரண கட்சியும் கிடையாது, என்று தெரிவித்திருக்கும் அவர் நம்மை நம்பி நமக்காக இருப்பவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆகவே தேர்தல் தேதி அறிவித்து அதற்கான வேலைகளை செய்யும் காட்சிகள் செய்யட்டும் நம் கட்சியை சார்ந்தவர்கள் அனைவரும் அதிமுகவின் கூட்டணியின் வெற்றிக்காக தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்.

நம்முடைய கட்சி தனித்து நின்றால் நம் கட்சியை சார்ந்த இளைஞர் படை, இளம்பெண்கள் படை ,என்று அனைத்து அமைப்புகளும் எப்படி முழு முயற்சியுடன் களத்தில் இறங்கி களப்பணி ஆற்றுவார்களோ அதேபோல இப்பொழுதும் அவர்களின் வேலையை செவ்வனே செய்ய வேண்டும். நமக்கு இட ஒதுக்கீடு கொடுத்த ஒரே காரணத்திற்காக தான் அவர்கள் வெற்றி பெற்று மறுபடியும் ஆட்சியில் அமர்ந்தார்கள் என்று நாளை ஊர் பேசும் அளவிற்கு நம்முடைய செயல்பாடு இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்.

மருத்துவர் ராமதாஸ் இந்த அளவிற்கு தீவிரமாக தன்னுடைய கட்சித் தொண்டர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துவதை கண்ட திமுகவைச் சார்ந்த நிர்வாகிகள் அனைவரும் பயத்தில் அஞ்சி நடுங்கி போய் இருப்பதாக சொல்கிறார்கள்.

ஏனென்றால் சாதாரணமாக மருத்துவர் அய்யா ஒரு அறிக்கை விட்டாலோ, அல்லது கட்சியினருக்கு ஒரு கட்டளையிட்டாளோ அந்த கட்சியை சார்ந்த அனைவரும் ஒன்றிணைந்து அவர் இட்ட கட்டளையை செய்து முடிப்பதுலேயே குறியாக இருப்பார்கள். இப்படி அனேக நேரங்களில் அநேக இடங்களில் பாமக தான் நினைத்ததை சாதித்து இருக்கிறது. ஆகவேதான் இதனை கண்டு திமுக பயம் கொண்டு இருப்பதாக சொல்கிறார்கள்.

ஆனால் மருத்துவர் அய்யாவிற்கு ஏன் இப்படி ஒரு விவேகம் வந்தது என்று கேட்டாள் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய காலத்திலிருந்தே சுமார் முப்பத்தி இரண்டு ஆண்டுகளாகவே இந்த தனி இட ஒதுக்கீட்டுக்காக பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக செய்யாத போராட்டங்கள், போகாத இடங்கள் அல்ல எவ்வளவு போராட்டங்கள் நடத்தினாலும் இதுவரையில் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் யாரும் வன்னியர்களையும் அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் சமயத்தில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்து வன்னியர்களின் வாக்குகளை பெறுவதில் தான் இதுவரையில் தமிழகத்தில் ஆண்டுகொண்டிருந்த கட்சிகள் அனைத்தும் குறியாக இருந்தனர்.

ஆனால் இப்பொழுது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு வன்னியர்களின் அனேக கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து அதனை நிறைவேற்றியும் வந்தது அதில் மிக முக்கிய கோரிக்கையான வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு கோரிக்கை சட்டசபையில் சமீபத்தில் நிறைவேற்றியது. அதற்கான சட்ட முன்வடிவை முழுமை பெறச் செய்தது.

அந்த சமயத்தில் சட்டசபையில் அறிவிப்பு வெளியானவுடன் பாட்டாளி மக்கள் கட்சியினரும், வன்னியர் இன மக்களும் தமிழகம் முழுவதிலும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவையும் கொண்டாட தொடங்கி விட்டார்கள். ஏனென்றால் கிட்டத்தட்ட 40 ஆண்டு காலமாக மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி வரும் இந்த கோரிக்கையை இதுவரையில் யாருமே கண்டுகொள்ளவில்லை. அப்படி இருக்கையில் இப்பொழுது முதல்வராக இருக்க கூடிய எடப்பாடி பழனிச்சாமி இந்த கோரிக்கையை நிறைவேற்றி இருப்பதுதான் இப்போது இருக்கும் வன்னிய மக்களின் மிகப்பெரிய எழுச்சிக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஆகவே எதிர்வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றியடைந்து எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஒரு முறை முதலமைச்சராக அமரப் போவது உறுதி உறுதி என்று கோஷம் இடுகிறார்கள் வன்னிய இன மக்களும், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும்.

Exit mobile version