Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விரைவில் ரேஷன் கடைகளில் கொண்டு வரப்படும் அதிரடி மாற்றம்! பொதுமக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 35,323 நியாய விலை கடைகள் இருக்கின்றன இதில் 10279 பகுதிநேர நியாய விலை கடைகளும் அடங்கும். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நியாய விலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களை தரமானதாக வழங்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது தமிழக அரசு. இதற்காக அவ்வப்போது நியாய விலை கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

அதனடிப்படையில் ரேஷன் கடைகளை நவீனப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது மாநில உணவுத்துறை. இதன் ஒரு கட்டமாக வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் நியாய விலை கடைகளுக்கு நிரந்தர கட்டிடம் கட்டிக் கொடுக்க அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. நிதிநிலைமைக்கு ஏற்றவாறு நியாய விலை கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டும் பணிகளையும் ஒருங்கிணைத்து வருகிறார்கள் என சொல்லப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் புதிதாக கட்டப்படும் அனைத்து நியாய விலை கடைகளின் முகப்பு தோற்றமும் ஒரே வடிவத்தில், ஒரே நிறத்தில், இருக்கும் விதத்தில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நியாய விலை கடைகளை நவீனப்படுத்தும் விதத்தில் இன்னும் என்னென்ன வசதிகளை செய்து கொடுக்கலாம் என்ற பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நியாய விலை கடைகளில் தற்போது அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய், மண்ணெண்ணெய், உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. சில கடைகளில் இதனுடன் டீ தூள், உப்பு, ஆகியவையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சிந்தாமணி உள்ளிட்ட கூட்டுறவு கடைகளில் சில மளிகை பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. கடையின் இடவசதியை பொறுத்து பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அதேபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் இட வசதி இருக்கின்ற நியாய விலை கடைகளில் மளிகை பொருட்களை விற்பனை செய்யவும் அரசு முயற்சி செய்து வருகிறது. சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்படுவதை போல குறிப்பிட்ட ரேஷன் கடைகளை தேர்ந்தெடுத்து அங்கே மளிகை பொருட்களை பாக்கெட் போட்டு விற்பனை செய்யவிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கு பொதுமக்கரிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் திட்டமும் அரசிடம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்காக 20 முதல் 25 நியாய விலை கடைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும். அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள் இந்த திட்டம் பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

Exit mobile version