இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க தினமும் இரவு 1 கிளாஸ் பருகுங்கள்..!!
இன்றைய காலத்தில் பெரும்பாலானார் சர்க்கரை நோய் பாதிப்பு ஆளாகி வருகின்றனர். பெரியவர்கள், சிறுவர்கள் என்று பாரபட்சமின்றி அனைவருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
இதை பரம்பரை நோய் என்று சொன்னாலும் மோசமான உணவுமுறை பழக்கத்தாலும் இந்த நோய் உண்டாகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு அளவாக இருக்க வேண்டும். மீறினால் அவை நீரிழிவு நோயாக மாறிவிடும். எனவே இரத்தத்தில் சரக்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள தினமும் மஞ்சள் கலந்த பாலை பருகத் தொடங்குங்கள். பாலில் சரக்கரை, தேன் என்று எந்த இரு இனிப்பையும் சேர்க்காமல் பருக வேண்டும்.
தேவையான பொருட்கள்:-
*பால்
*மஞ்சள்
செய்முறை…
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் பால் ஊற்றவும். பின்னர் அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கிளாஸுக்கு வடிகட்டி பருகவும். இதை இரவு நேரத்தில் குடிப்பது நல்லது. இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தோம் என்றால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
மஞ்சளில் குர்க்குமின், ஆன்டி-ஆக்ஸிடனட்டுகள், ஆன்டி- ஏஜிங் உள்ளிட்டவைகள் நிறைந்து காணப்படுகிறது. பாலில் புரதம், கால்சியம், வைட்டமின் பி, சி, டி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இயற்கை கிருமி நாசினி என்று அழைக்கப்படும் மஞ்சளை பாலில் கலந்து பருகினால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். செரிமானக் கோளாறால் அவதிப்பட்டு வரும் நபர்கள் மஞ்சள் கலந்த பருகினால் உடனடி தீர்வு கிடைக்கும்.