Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கிலோ கணக்கில் தேங்கி கிடந்த மலம் முழுவதும் வெளியேற இதை 1 கிளாஸ் அருந்துங்கள்!

#image_title

கிலோ கணக்கில் தேங்கி கிடந்த மலம் முழுவதும் வெளியேற இதை 1 கிளாஸ் அருந்துங்கள்!

உடலில் தேங்கி கிடக்கும் தேவையற்ற கழிவுகள் மலம் மூலம் வெளியேறி வருகிறது. இதனால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். ஒருவேளை மலத்தை கழிக்காமல் அவை உடலில் அடைப்பட்டு கிடந்தால் வாயுத்தொல்லை, வயிறு கோளாறு, மூலம் உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

எனவே மலத்தை அடக்கி வைக்காமல் அதனை முறையாக கழித்து விடுவது நல்லது. ஒருவேளை நீண்ட நாட்களாக மலம் குடலில் அடைபட்டு மலம் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கத்தை ஒருமுறை முயற்சித்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*மிளகு

*வெந்தயம்

*சீரகம்

*எலுமிச்சை சாறு

*விளக்கெண்ணெய்

*தண்ணீர்

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் 1/2 தேக்கரண்டி வெந்தயம், 1/4 தேக்கரண்டி மிளகு மற்றும் 1/2 தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடேற்றவும். இந்த நீரை மிளகு, வெந்தயம், சீரகம் சேர்த்துள்ள கிண்ணத்தில் ஊற்றி கலந்து விடவும்.

பிறகு 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1 தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து காலை நேரத்தில் பருகவும்.

சீரகம், மிளகு, வெந்தயத்தை சாப்பிடவும். இவ்வாறு செய்தால் குடலில் அடைபட்டு கிடந்த மலம் அனைத்தும் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Exit mobile version