Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குடல் சார்ந்த பிரச்சனை நீங்க இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

#image_title

குடல் சார்ந்த பிரச்சனை நீங்க இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

தினசரி உணவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று சீரகம். இந்த சீரகத்தில் வாசனையோடு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் அதிகளவு இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, தாமிரம், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் இருக்கிறது. சீரகம் செரிமான பாதிப்புக்கு நிறைந்த தீர்வாகும். அது மட்டும் இன்றி குடலில் ஏற்படும் பல பாதிப்புகளுக்கு இவை சிறந்த மருந்தாக விளங்குகிறது.

அதேபோல் பூண்டு அதிக மருத்துவ குணம் கொண்ட பொருளாகும். இந்த பூண்டு செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் உள்ளிட்ட குடல் சார்ந்த பாதிப்பை குணப்படுத்த பெரிதும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

*சீரகம் – 1 தேக்கரண்டி

*பூண்டு – 3 பல்

*எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

செய்முறை:-

உரலில் 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொள்ளவும். அடுத்து 3 பல் சேர்த்து இடித்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் இடித்து வைத்துள்ள சீரகம் + பூண்டு சேர்த்து கொள்ளவும். பின்னர் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.

சீரகம் + பூண்டு சாறு தண்ணீரில் இறங்கியதும் அடுப்பை அணைத்து விடவும். பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் 1 தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு கலந்து பருகாவும்.

இதை காலையில் வெறும் வயிற்றில் பருகி வருவதன் மூலம் குடல் சார்ந்த பாதிப்பு விரைவில் நீங்கும்.

Exit mobile version