Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு காலை எழுந்தவுடன் டீ காபிக்கு பதிலாக இதனை ஒரு கிளாஸ் குடித்தால் போதும்!!

வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு காலை எழுந்தவுடன் டீ காபிக்கு பதிலாக இதனை ஒரு கிளாஸ் குடித்தால் போதும்!!

காலை எழுந்தவுடன் டீ,காபியை தேடும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. அவற்றை குடித்து நம்முடைய குடலை கெடுத்துக் கொள்ளாமல் அவற்றுக்கு பதிலாக காலை எழுந்ததும் குடிக்க வேண்டிய சில ஆரோக்கிய பானங்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

கோதுமைப் புல் சாறு:

காலையில் வெறும் வயிற்றில் கோதுமைப்புல் சாரினை குடிப்பது உடலின் ஜீரண சக்தியை மேம்படுத்த உதவும். இதில் உள்ள என்சைம்கள் நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை முறையாக உறிஞ்சிக்கொள்ள உதவுகிறது. அதோடு வாயுத்தொல்லை, வயிற்று உப்புசம், குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ,மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு ,வயிறு மந்தம் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது.

தண்ணீரும் சில வைட்டமின்களும்:

தினமும் காலை எழுந்தவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது. வெறும் தண்ணீராக மட்டும் மருந்தாமல் அதனுடன் ஒரு ஸ்லைஸ் எலுமிச்சை அல்லது வெள்ளரிக்காய்களை கலந்தும் அருந்தலாம். எலுமிச்சை நீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி அளவை கொண்டிருக்கிறது. இதே போல் ஆப்பிள் சீடர் வினிகரையும் தண்ணீர் கலந்து காலையில் அருந்தலாம் ஆப்பிள் சீடர் வினிகர் ரத்த சர்க்கரையை குறைக்கிறது மற்றும் எடையை குறைக்க உதவுகிறது. இது தவிர தினமும் இளநீர் கிடைக்கும் வாய்ப்பு இருந்தால் யோசிக்காமல் காலையில் பருகுங்கள்.

 

க்ரீன் டியூம் காஃபியும்:

 

காலையில் தண்ணீர் பருக விருப்பம் இல்லையா அதற்கான மற்றொரு சாய்ஸ் தான் கிரீன் டீயும் பிளாக் காப்பியும் .கிரீன் டீயை பருகுவது அதன் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்ட்களை உருவாக்குகிறது. அதேபோல் உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை அழிக்க உதவியாக இருக்கும் .அதே போல காலையில் ஒரு கப் பிளாக் காபி குடித்தால் இந்த நாளில் உங்களுக்கு இரட்டிப்பு சுறுசுறுப்பு கிடைக்கிறது. இது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து நீரேற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.

 

காய்கறி-பழச்சாறு:

 

காபி உங்களுக்கு செட்டாகவில்லை என்றால் நீங்கள் காய்கறி சூப்பினை காலையில் எடுத்துக் கொள்ளலாம் .குறிப்பாக முட்டைக்கோஸ், கீரை வகைகள் போன்றவற்றை தண்ணீரில் வேக வைத்து அந்த சாற்றினை பருகலாம். இதன் மூலம் ஆற்றல் மட்டங்களை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரும்புச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள் உங்கள் செல்களுக்கு ஆக்சிஜனை வழங்கவும் சோர்வை எதிர்த்து போராடவும் உதவுகின்றன. அதேபோல கோஜி பெர்ரி பழத்தின் ஜூஸை காலையில் குடித்தால் அதில் இருக்கும் வைட்டமின்கள் தாதுக்கள் உங்களை சுறுசுறுப்பாகவும் மன அழுத்தத்தை குறைத்தும் நாட்களைத் தொடங்க உதவியாக இருக்கும்.

 

இஞ்சியும் கற்றாழையும்:

 

சிலருக்கு மிகவும் சென்சிடிவ் ஆன வயிறாக இருக்கும். சில வயிற்று பிரச்சனைகளை சந்திப்பவராக இருந்தால் காலையில் இஞ்சி சாற்றினை எடுத்துக் கொள்ளலாம். ஒரு கப் கொதிக்கும் நீரில் ஒரு சில தேக்கரண்டி நன்றாக துருவிய புதிய இஞ்சியை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிவிட்டு இறக்கவும். காலையில் இஞ்சி டீ முதலில் பருகினால் வயிற்றில் ஏற்படும் அசௌகரியம், குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றை குறைக்கலாம் .அதே போல கற்றாழை சாற்றைப் பருகினால் அதில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இரைப்பை குடல் வளர்ச்சியை குறைக்க உதவுகின்றன.

Exit mobile version