வெயில் காலத்தில் உடலை ஜில்லுனு வைக்க இதை ஒரு கிளாஸ் தவறாமல் குடியுங்கள்!!

0
199
#image_title

வெயில் காலத்தில் உடலை ஜில்லுனு வைக்க இதை ஒரு கிளாஸ் தவறாமல் குடியுங்கள்!!

கோடை காலம் தொடங்கி விட்டது.வெயில் நெருப்பை சுட்டெரிக்கிறது.இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இளநீர் சர்பத் செய்து குடித்து வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)இளநீர்
2)இளநீர் வழுக்கை
3)சப்ஜா விதை
4)கடல் பாசி
5)சர்க்கரை
6)பால்
7)கண்டன்ஸ்டு மில்க்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி சப்ஜா விதை போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.பிறகு ஒரு இளநீரை வெட்டி அதில் உள்ள நீரை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

பிறகு அதில் சிறிது கடல் பாசி சேர்த்து கலக்கவும்.அதன் பின்னர் தங்களுக்கு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலக்கி ப்ரிட்ஜில் வைக்கவும்.

இவை ஜெல்லி பதத்திற்கு வந்ததும் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் காய்ச்சிய பால் மற்றும் 3 தேக்கரண்டி கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கலக்கவும்.அதன் பின்னர் ஊறவைத்த சப்ஜா விதை,தயாரித்த இளநீர் ஜெல்லி சேர்க்கவும்.இறுதியாக அதில் சிறிது இளநீர் வழுக்கை சேர்த்து கலந்து குடிக்கவும்.இந்த இளநீர் சர்பத் உடலில் உள்ள உஷ்ணத்தை நீக்கி உடலை குளுமையாக வைக்க உதவுகிறது.

கோடை காலத்தில் வாரத்தில் 3 முறை இந்த இளநீர் சர்ப்த் செய்து குடித்து வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.