Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாள்பட்ட மாதவிடாய் பிரச்சனை சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்..!!

#image_title

நாள்பட்ட மாதவிடாய் பிரச்சனை சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்..!!

பெண்கள் சந்தித்து வரும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று மாதவிடாய் சுழற்சி. உணவுமுறை மற்றும் வாழ்கை முறை மாற்றத்தால் உடலில் பல வித பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதில் ஒன்றான முறையற்ற மாதவிடாய் பிரச்சனை சரியாக மாத்திரை எடுத்துக் கொள்வதை பெரும்பாலான பெண்கள் வழக்கமாக வைத்து இருக்கின்றனர். அவ்வாறு செய்வதால் உடலில் பல பிரச்சனைகள் தான் ஏற்படும்.

இந்த முறையற்ற மாதவிடாய் பிரச்சனை சரியாக வீட்டு வைத்தியத்தை கடைபிடிப்பது நல்லது. இதன் மூலம் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

தேவையான பொருட்கள்:-

*சீரகம்

*கருப்பட்டி

*தண்ணீர்

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும். பின்னர் அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொள்ளவும். அடுத்து 1 தேக்கரண்டி கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு இரவு ஸ்நேரத்தில் செய்து குடித்து வந்தால் மாதக்கணக்கில் வராத மாதவிடாயும் உடனடியாக வந்து விடும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*எள்

*நாட்டு சர்க்கரை

*தண்ணீர்

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 தேக்கரண்டி எள் சேர்த்து மிதமான தீயில் வறுத்து பொடி செய்து கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் 1 கிளஸ் தண்ணீர் ஊற்றி சூடேற்றவும். பிறகு எள்ளு பொடியை சேர்த்து கலந்து விடவும். அடுத்து 2 தேக்கரண்டி நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி பருகவும். இவ்வாறு செய்தால் முறையற்ற மாதவிடாய் பிரச்சனை சரியாகும்.

Exit mobile version