அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கு நொடியில் குணமாக இதை ஒரு கிளாஸ் குடிங்க!

0
234
#image_title

அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கு நொடியில் குணமாக இதை ஒரு கிளாஸ் குடிங்க!

அதிகப்படியான உடல் சூடு, ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் போன்றவற்றால் சிலருக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். இந்த வயிற்றுப் போக்கு ஏற்படுவதால் உடல் சோர்வு, உடல் எடை குறைதல், மந்த நிலை, பசியின்மை, குமட்டல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

வயிற்று போக்கு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

*இளநீர்
*வெந்தயப் பொடி
*சப்ஜா விதை

செய்முறை…

உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடிய பொருட்களை உட்கொண்டு வந்தால் வயிற்றுப் போக்கு ஏற்படாது.

அந்த வகையில் இளநீரை குடிப்பதினால் உடல் குளிர்ச்சி அடைந்து பித்தம், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படாது.

முதலில் ஒரு இளநீரில் உள்ள தண்ணீரை ஒரு டம்ளருக்கு ஊற்றி அதில் 1/4 தேக்கரண்டி வெந்தயப் பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதை போட்டு 3 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு இந்த இளநீர் தண்ணீரை குடித்தால் வயிற்றுப் போக்கு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.