தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வாயு தொல்லை நீங்க இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! அடுத்த 5 நிமிடத்தில் முழு தீர்வு கிடைக்கும்!!

0
84
#image_title

தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வாயு தொல்லை நீங்க இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! அடுத்த 5 நிமிடத்தில் முழு தீர்வு கிடைக்கும்!!

இன்றைய கால வாழ்க்கை முறை ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தால் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் நாம் உடல் சார்ந்த பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். அடிக்கடி ஹோட்டல் உணவுகளை உண்ணுவது, காரம் நிறைந்த உணவு உண்பது, எளிதில் செரிக்காத உணவை உண்பது போன்றவற்றால் மலச்சிக்கல், குடல் வீக்கம்,செரிமான பிரச்சனை உள்ளிட்டவைகள் ஏற்படுகிறது.

இதனால் வாயுத் தொல்லை பாதிப்பு ஏற்படத் தொடங்குகிறது. வாயுத் தொல்லை ஏற்படத் தொடங்கி விட்டால் பொது வெளிகளில் நடமாடுவது சிரமாகி விடும். இந்த வாயுத் தொல்லையை சரி செய்ய பூண்டு சிறந்த தீர்வாக இருக்கும்.

வாயுத் தொல்லையை சரி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*பூண்டு

*வர மிளகாய்

*மிளகு

*சீரகம்

*கறிவேப்பிலை

*எண்ணெய்

*தக்காளி

*பெருங்காயத் தூள்

*உப்பு

*புளி

*கடுகு

*கொத்தமல்லி இலை

செய்முறை:-

ஒரு பாத்திரம் எடுத்து அதில் 1 எலுமிச்சம் அளவு புளி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.

ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் 10 பல் பூண்டு, 2 வர மிளகாய், 2 தேக்கரண்டி மிளகு, 1 தேக்கரண்டி சீரகம், 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
அவை சூடேறியதும் அதில் 1 தேக்கரண்டி கடுகு சேர்த்து பொரிய விடவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளி, 1 கொத்து கறிவேப்பிலை, 1 தேக்கரண்டி பெருங்காய தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

பின்னர் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து ஊறவைத்துள்ள புளி கரைசலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

பின்னர் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும். வாசனைக்காக சிறிதளவு கொத்தமல்லி இலைகளை சேர்த்து கொள்ளவும். பூண்டு ரசம் இவ்வாறு செய்து சாப்பிடுவதன் மூலம் செரிமானக் கோளாறு, வாயு தொல்லை விரைவில் குணமாகும்.