நுரையீரலில் ஒட்டி கிடக்கும் கெட்டி சளி பனி போல் கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!!
சுவாச உறுப்பான நுரையீரலில் தேங்கியுள்ள சளியை கரைத்து வெளியேற்ற இந்த பால் செய்து குடியுங்கள்.
தேவையான பொருட்கள்:-
பால் – 1 டம்ளர்
ஜாதிக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
சுக்கு பொடி – 1/2 தேக்கரண்டி
மிளகு பொடி – 1/4 தேக்கரண்டி
பனங்கற்கண்டு – சிறிதளவு
செய்முறை:-
ஒரு ஜாதிக்காய்,1 துண்டு சுக்கு மற்றும் 4 மிளகை தனி தனியாக மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றவும்.ஒரு நிமிடம் கழித்து அரைத்த ஜாதிக்காய்,சுக்கு மற்றும் மிளகு பொடியை போட்டு மிதமான தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பின்னர் இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பனங்கற்கண்டு சிறிதளவு போட்டு குடிக்கவும்.இந்த மூலிகை பால் நுரையீரலில் தேங்கிய கெட்டி சளியை கரைத்து மலம் வழியாக வெளியில் தள்ளிவிடும்.
தேவையான பொருட்கள்:-
பால் – 1 டம்ளர்
தேன் – சிறிதளவு
மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
பூண்டு பொடி – 1/4 தேக்கரண்டி
செய்முறை:-
சிறிது பூண்டை தோல் நீக்கி வறுத்து பொடி செய்து கொள்ளவும்.அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.
பிறகு அதில் அரைத்த பூண்டு பொடி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து காய்ச்சி ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.பிறகு சிறிது தேன் சேர்த்து கலந்து குடிக்கவும்.இந்த மூலிகை பால் நுரையீரலில் தேங்கிய கெட்டி சளியை கரைத்து மலம் வழியாக வெளியில் தள்ளிவிடும்.