Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சூட்டை கிளப்பும் வெயிலில் உடல் வலிமையாவும் குளிர்ச்சியாகவும் இருக்க இதை ஒரு கிளாஸ் குடியுங்கள்!!

Drink a glass of this to stay strong and cool in the scorching heat!!

Drink a glass of this to stay strong and cool in the scorching heat!!

சூட்டை கிளப்பும் வெயிலில் உடல் வலிமையாவும் குளிர்ச்சியாகவும் இருக்க இதை ஒரு கிளாஸ் குடியுங்கள்!!

கோடை காலத்தில் ஏற்படக் கூடிய உடல் உஷ்ணம் மற்றும் சோர்வில் இருந்து தப்பிக்க இந்த லஸ்ஸி வகைகளை செய்து குடியுங்கள்.

1.புதினா லஸ்ஸி

தேவையான பொருட்கள்:-

1)உலர்ந்த புதினா இலைகள்
2)சர்க்கரை
3)தயிர்
4)சீரகத் தூள்

செய்முறை:-

2 தேக்கரண்டி அளவு புதினா இலைகளை வெயிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு கப் தயிரை ஒரு கிளாஸில் ஊற்றிக் கொள்ளவும்.முன்னதாக இந்த தயிரை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.பிறகு வெயிலில் உலர்த்திய புதினா இலை ஒரு தேக்கரண்டி அளவு தயிரில் போட்டு கலந்து விடவும்.

பிறகு 1/2 தேக்கரண்டி சீர்கத் தூளை சேர்த்து கலந்தால் சுவையான புதினா லஸ்ஸி தயார்.இதை குடித்து வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.அதுமட்டும் இன்றி அதிகப்படியான வெயிலால் ஏற்படக் கூடிய உடல் சூடு தணிந்து குளுமையாகும்.

2.கற்பூர லஸ்ஸி

தேவையான பொருட்கள்:-

1)தயிர்
2)வெல்லம்
3)பச்சை கற்பூரம்

செய்முறை:-

முதலில் ஒரு கப் தயிரை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி வெல்லம் சேர்த்து கலந்து விடவும்.அதன் பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி 1/4 தேக்கரண்டி பச்சை கற்பூர தூள் சேர்த்து கலந்தால்
சுவையான கற்பூர லஸ்ஸி தயார்.இதை குடித்து வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.அதுமட்டும் இன்றி அதிகப்படியான வெயிலால் ஏற்படக் கூடிய உடல் சூடு தணிந்து குளுமையாகும்.

3.ஏலக்காய் லஸ்ஸி

தேவையான பொருட்கள்:-

1)தயிர்
2)வெள்ளை கற்கண்டு
3)ஏலக்காய்

செய்முறை:-

முதலில் ஒரு கப் தயிர் மற்றும் ஒரு துண்டு வெள்ளை கற்கண்டை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி 1/4 தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கலந்தால்
சுவையான ஏலக்காய் லஸ்ஸி தயார்.இதை குடித்து வந்தால் உடல் சூடு தணிந்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

Exit mobile version