Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

3 நாட்கள் குடித்தால் போதும்!! வாயு உடல் சோர்வு மலச்சிக்கல் என அனைத்தும் மாயமாகிவிடும்!!

3 நாட்கள் குடித்தால் போதும்!! வாயு உடல் சோர்வு மலச்சிக்கல் என அனைத்தும் மாயமாகிவிடும்!!

சில நேரங்களில் நாம் சாப்பிடக்கூடிய உணவானது செரிமானம் ஆகாமல் நெஞ்செரிச்சல், அஜீரணக் கோளாறு, வாயு தொல்லை, வயிறு கோளாறு, மலச்சிக்கல், வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அனைவரும் இப்பொழுது அதிகமாக ஓட்டல் உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகள் உருவாக ஆரம்பிக்கிறது.

இன்னும் சில பேருக்கு காலநிலை மாற்றங்களின் போது ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு சிரமம் ஏற்படும். 40 வயது தாண்டி விட்டாலே உடம்பில் ஒரு அசதி ஏற்பட்டு சோர்வாக காணப்படும். எனவே இது அனைத்தையும் சரி செய்து உடம்பிற்கு ஒரு தெம்பை அளிக்கக்கூடிய ஒரு பானத்தை எவ்வாறு தயாரிப்பது என்பதை இங்கு அறிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்:
பெருஞ்சீரகம்(அ) சோம்பு
வெல்லம்
ஏலக்காய்

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கிளாஸ் அளவு தண்ணீரை சேர்த்துக் கொள்ளவும். இந்த தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி அளவு சோம்பு மற்றும் 2 ஏலக்காயை கிள்ளி சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது இதை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். ஐந்து நிமிடங்களுக்கு இது நன்றாக கொதித்த பின்னர் ஒரு தேக்கரண்டி அளவு வெல்லத்தை சேர்த்துக் கொள்ளவும். பிறகு இன்னும் இரண்டு நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்கவும்.

பிறகு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதை இரவு தூங்குவதற்கு முன்பாக குடித்தால் உடம்பிற்கு மிகவும் நல்லது அல்லது காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றிலும் குடித்து வரலாம். இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறைகள் குடித்து வர மிகவும் நல்லது. குறிப்பாக செரிமான கோளாறு வாயு தொல்லை மலச்சிக்கல் போன்ற பிரச்சனை இருந்தால் வாரத்தில் மூன்று முறை தாராளமாக இந்த பானத்தை குடித்து வரலாம்.

உடம்பிற்கு நல்ல ஒரு தெம்பை கொடுத்து உடல் சோர்வை நீக்கி சளி காய்ச்சல் இருமல் போன்ற பிரச்சனைகள் வராமல் இந்த பானம் தடுக்கும். மேலும் இதில் சேர்க்கப்பட்டிருக்கக் கூடிய சோம்பு செரிமானம் செய்வதோடு மட்டுமல்லாமல் இதில் இருக்கக்கூடிய இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி நம் உடம்பில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இந்த சோம்பை தினமும் சாப்பிட்டு வர கண் பார்வை சக்தி நிச்சயமாக அதிகரிக்கும்.

உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும் இந்த சோம்பானது பயன்படுகிறது. முக்கியமாக சிறுநீரகத்தை நன்கு சுத்தப்படுத்தும் மற்றும் தாய்ப்பாலை நன்கு சுரக்க வைக்கும். இது மட்டுமல்லாது மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய வலியையும் இந்த சோம்பு தடுக்கும்.

Exit mobile version