Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சர்க்கரை நோயை அடியோடு விரட்ட இதை ஒரு ஸ்பூன் மட்டும் குடிங்க!! 

#image_title

சர்க்கரை நோயை அடியோடு விரட்ட இதை ஒரு ஸ்பூன் மட்டும் குடிங்க!!
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பொதுவாக உடல் எரிச்சல், உள்ளங்கால் எரிச்சல், சிறுநீர் தாரை எரிச்சல், உடல் சோர்வு, காலை நேரங்களில் சுறுசுறுப்பின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகள் எல்லாவற்றையும் சரி செய்யக் கூடிய எளிமையான வீட்டு வைத்தியத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் எரிச்சல் பிரச்சனைகளை சரி செய்ய அற்புதமான மருந்தாக நாவல் பழம் பயன்படுகின்றது. நாவல் பழத்தில் உடலுக்கு தேவையான பல நன்மைகள் இருக்கிறது. குறிப்பாக இந்த பழம் சர்க்கரை நோய்க்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. அதிலும் நாவல் பழத்தின் விதை சர்க்கரை நோயாளிகளுக்கு எண்ணற்ற பலன்களை தருகின்றது.
நாவல் பழத்தின் விதையின் நன்மைகள்…
* இந்த நாவல்பழ விதையை நாம் காயவைத்து பொடியாக்கி சர்க்கரை நோய்க்கு எதிராக பயன்படுத்தலாம்.
* சர்க்கரை நோயாளிகளின் இரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை நீக்கக் கூடிய தன்மை இந்த நாவல்பழ பொடிக்கு உள்ளது.
* நரம்பு தொடர்பான நோய்க்கு சிறந்த தீர்வாக இந்த நாவல் பழ விதைகள் உள்ளது.
* சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் உடல் சோர்வை உடனடியாக இந்த நாவல்பழ விதைகள் நீக்கும்.
இந்த நாவல் கொட்டையின் பொடியை வைத்துதான் நாம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் எரிச்சலை குணப்படுத்தும் வீட்டு வைத்திய முறையை செய்ய போகிறோம்.
இந்த நாவல்பழ விதையின் பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அவ்வாறு இல்லையென்றால் நீங்கள் வீட்டிலேயே இந்த நாவல் பழ விதைப் பொடியை தயாரித்துக் கொள்ளலாம்.
வீடுகளில் தாயரிக்கும் பொழுது நாவல் பழ விதைகளை மூன்று.நாட்கள் நன்கு வெயிலில் காயவைக்க வேண்டும். பிறகு இந்த விதைகளை இரண்டாக பிரித்தால் உள்ளே லேசானா உட்கரு கிடைக்கும். பிறகு இதையும் இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். பிறகு இதை நன்கு அரைத்து சலித்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி வைத்துக் கொள்ளவும்.
இதை பயன்படுத்தும் முறை…
தினமும் 5 கிராம் அளவிற்கு அதாவது ஒரு ஸ்பூன் அளவிற்கு இந்த நாவல் பழ விதையின் பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும். சாதாரண தண்ணீரில் இந்த ஒரு ஸ்பூன் அளவு பொடியை நன்கு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இந்த வைத்தியத்தை தொடர்ந்து 30 முதல் 45 நாட்கள் வரை செய்து வரும் பொழுது நல்ல ஒரு மாற்றத்தை உணர்வீர்கள். வைத்தியத்தை 30 முதல் 45 நாட்கள் வரை செய்து பிறகு ஒன்று அல்லது இரண்டு மாதம் இடைவெளி எடுத்து இந்த வைத்தியத்தை மீண்டும் மேற்கொள்ளலாம்.
Exit mobile version