21 வகை மூல நோயை குணப்படுத்தும் பானம்!! 7 நாட்களில் தீர்வு நிச்சயம்.. இன்றே தொடங்குங்கள்!!
மூல நோய் என்பது மிகவும் அவதிப்பட வைக்க கூடிய நோய்களில் ஒன்றாகும்.இந்த மூல நோயில் உள் மூலம்,வெளி மூலம்,இரத்த மூலம் என்று 21 வகை இருக்கிறது.மூல நோய் மலச்சிக்கல் பாதிப்பால் ஏற்படுகிறது.
இந்த பாதிப்பு ஏற்பட்டால் மலம் கழிப்பது என்பது மிகவும் கடினமான வேலையாக மாறி விடும்.வற மலம் வெளியேறும் பொழுது வலி அதிகமாக ஏற்பட்டு அவை வெளியேறும் பகுதிகளில் புண்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.இந்த பாதிப்பை இயற்கை வழிமுறைகளை பின்பற்றி குணப்படுத்துவது நல்லது.
தேவையான பொருட்கள்:-
*துத்தி இலை – 1 கைப்பிடி அளவு
*பால் – 3/4 டம்ளர்
*வெல்லம் – தேவையான அளவு
(அல்லது)
நாட்டு சர்க்கரை
(அல்லது)
பனங்கற்கண்டு
செய்முறை:-
முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கைப்பிடி அளவு துத்தி கீரை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அலசிக் கொள்ளவும்.
பின்னர் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 3/4 கிளாஸ் பால் ஊற்றி கொதிக்க விடவும்.3/4 கிளாஸ் பால் 1/2 கிளாஸ் என்ற அளவுக்கு வந்த பின்னர் அடுப்பை அணைக்கவும்.
பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.அடுத்து அரைத்து வைத்துள்ள துத்தி இலை சாற்றை பால் இருக்கும் கிளாசில் வடிகட்டி கொள்ளவும்.அதோடு சுவைக்காக தேவையான அளவு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கலந்து பருகவும்.
இதை எப்பொழுது வேண்டுமானாலும் பருகலாம்.இவ்வாறு தொடர்ந்து பருகி வருவதன் மூலம் தீராத மூல நோய் பாதிப்பு விரைவில் சரியாகும்.
மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
*மருதாணி – 1 கைப்பிடி அளவு
*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
செய்முறை:-
ஒரு பவுலில் 1 கைப்பிடி அளவு மருதாணி போட்டு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் அதில் சுத்தமான தண்ணீர் 1 கப் ஊற்றி இரவு முழுவதும் ஊற விடவும்.
மறுநாள் காலையில் அதில் சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி சேர்த்து கலக்கி கொள்ளவும்.
பின்னர் இதை மற்றொரு பவுலுக்கு வடிகட்டி கொள்ளவும்.இதை காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தோம் என்றால் நாள்பட்ட மூல பாதிப்பு உடனடியாக சரியாகிவிடும்.