Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் தைராய்டு பிரச்சனை அடியோடு நீங்க இந்த 2 ட்ரிங்க் குடிங்கள்!!

Drink these 2 drinks to get rid of your thyroid problem!!

Drink these 2 drinks to get rid of your thyroid problem!!

உங்கள் தைராய்டு பிரச்சனை அடியோடு நீங்க இந்த 2 ட்ரிங்க் குடிங்கள்!!

பெண்கள் பலருக்கும் உடல் ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். அதில் பெரும்பான்மையாக இருப்பது ஹார்மோன் மாற்றம், உடல் எடை அதிகரித்தல், தைராய்டு பிரச்சனை கர்ப்பப்பை நீர்க்கட்டி போன்றவை ஆகும். இதில் தைராய்டு பிரச்சனை தான் பலருக்கும் பல உபாதைகளை ஏற்படுகிறது. முதலில் தைராய்டு இரண்டு வகையாக உள்ளது.

ஹைப்பர் தைராய்டு ஹைப்போ தைராய்டு என இருவகை உள்ளது. இவ்வாறு தைராய்டு இருப்பவர்கள் உடல் எடை அதிகரிப்பு அல்லது மாறான உடல் எடை குறைவு போன்ற பலம் மாற்றங்களை உடல் ரீதியாக சந்திக்க வேண்டி உள்ளது.அவ்வாறு தைராய்டு இருப்பவர்கள் இந்த பதிவில் வரும் இரண்டு ட்ரிங்க்கை எடுத்துக் கொண்டால் போதும் நல்ல மாற்றத்தை காணலாம்.

தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய்
இந்து உப்பு
மிளகு

செய்முறை:
பெரிய நெல்லிக்காய் ஐந்து முதல் ஆறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இதனை சிறு சிறிதாக வெட்டி மிக்ஸி ஜாரில் சேர்த்து ஜூஸ் பதத்திற்கு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் சிறிதளவு இந்து உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கொள்ளவும்.
தினந்தோறும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் இதனை எடுத்துக் கொண்டால் தைராய்டு ஹார்மோன் சுரப்பது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

2வது பானம்:
இரண்டாவது பாகம் வெந்தய தண்ணீர். முந்தைய நாள் இரவு வெந்தயத்தை தண்ணீரில் ஊற்றி நன்றாக ஊற வைத்து விட வேண்டும். பின்பு மறுநாள் காலை உணவுக்கு பிறகு 11 மணி அளவில் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் தைராய்டு சுரப்பது கட்டுப்படுத்த வழிவகுக்கும்.
இந்த இரண்டு ட்ரிங்க்கையும் ஒரு மாதம் எடுத்துக் கொண்டால் போதும் உங்கள் தைராய்டு பிரச்சனை முற்றிலும் நீங்கிவிடும்.

Exit mobile version