மலச்சிக்கல் பாதிப்பு நிமிடத்தில் நீங்க இந்த இரண்டு எண்ணெயை குடிங்க..!!
நம்மில் பெரும்பாலானோர் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று மலசிக்கல். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியேற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.
மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுவது அவசியம். ஒருவேளை அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் பின்னர் கழிக்கும் பொழுது நமக்கு மிகுந்த வலி ஏற்பட்டு அவை மிகவும் உலர்ந்து வெளியேறும்.
தேவையான பொருட்கள்:-
*ஆலிவ் எண்ணெய் – 1 தேக்கரண்டி
*விளக்கெண்ணெய் – 1 தேக்கரண்டி
*எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் சூடேற்றி ஒரு டம்ளருக்கு ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் 1 தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து விடவும்.
அடுத்து 1 தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு எடுத்து அதில் கலந்து பருகவும். இதை காலையில் வெறும் வயிற்றில் தான் பருக வேண்டும். இந்த பானத்தை பருகிய அடுத்த 1 மணி நேரத்தில் ஆசன வாயிலிருந்து மலம் வெளியேறத் தொடங்கும். வயிற்றில் உள்ள மலக் கழிவுகள் முழுமையாக வெளியேறியப் பின்னர் குளிரிச்சி நிறைந்த இளநீர், தயிர் உள்ளிட்டவற்றை உணவாக எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு தீர்வு:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் 1/2 தேக்கரண்டி ஓமம் மற்றும் சீரகத்தை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
இந்த பானத்தை ஒரு டம்ளருக்கு வடிகட்டி சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து வெதுவெதுப்பான சூட்டில் பருகவும். இவ்வாறு செய்து பருகினால் அடுத்த 2 மணி நேரத்தில் உடலில் உள்ள மொத்த கழிவுகளும் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.