இனி காலையில் டீ காபிக்கு பதில் இந்த 1 டிரிங் குடியுங்கள்.. உங்களுக்கு எந்த நோயும் வராது!!

0
87
Drink this 1 drink instead of tea coffee in the morning.. you will not get any disease!!

இன்றைய காலத்தில் உடலை திடமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க சிறு தானியங்களை கொண்டு சத்துமாவு தயாரித்து கஞ்சி செய்து பருகலாம்.

தேவையான பொருட்கள்:

1)ராகி – ஒரு கப்
2)அவல் – அரை கப்
3)ஓட்ஸ் – அரை கப்
4)வெள்ளை சோளம் – அரை கப்
5)ராஜ்மா – அரை கப்
6)கம்பு – அரை கப்
7)கருப்பு எள் – கால் கப்
8)பச்சை பயறு – அரை கப்
9)வேர்க்கடலை – அரை கப்
10)கோதுமை – ஒரு கப்
11)பாதாம் பருப்பு – கால் கப்
12)முந்திரி பருப்பு – கால் கப்
13)பார்லி – கால் கப்
14)வால்நட் – கால் கப்
15)ஏலக்காய் – பத்து
16)சுக்கு – ஒரு துண்டு

செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு கப் ராகியை போட்டு அலசவும்.ராகியில் உள்ள மண் மற்றும் தூசு நீங்கியதும் அதை ஒரு காட்டன் துணியில் பரப்பி வெயிலில் காய விடவும்.

இதேபோல் கம்பு,ராஜ்மா,கோதுமை,பார்லி,அவல்,வெள்ளை சோளம்,கருப்பு எள்,பச்சைப்பயறு போன்றவற்றை தனித் தனியாக தண்ணீரில் அலசி காட்டன் தனித் தனியாக காய வைத்துக் கொள்ளவும்.இரண்டு நாட்களுக்ளு காயவிட்டு அனைத்தையும் தனி தனியாக வறுத்துக் கொள்ளவும்.

அடுத்து வாணலியில் கால் கப் வால்நட்,கால் கப் பாதாம் பருப்பு,கால் கப் முந்திரி சேர்த்து மிதமான தீயில் வறுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.அதற்கு அடுத்து அரை கப் ஓட்ஸை லேசாக வறுத்து தட்டில் கொட்டிக் கொள்ளவும்.

பின்னர் அரை கப் வேர்க்கடலையை வறுத்து அதையும் ஆறவிடவும்.அடுத்து 10 ஏலக்காய் மற்றும் ஒரு துண்டு தோல் நீக்கிய சுக்கை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்பொழுது மிக்சர் ஜாரை எடுத்து வறுத்த பொருட்களை சேர்த்து பைன் பவுடராக்கி கொள்ளவும்.அடுத்து ஜல்லடையில் மாவை கொட்டி சலித்து எடுக்கவும்.அவ்வளவு தான் உடலை வலுவாக்கும் சத்துமாவு தயார்.

பயன்படுத்தும் முறை:

ஒரு கிண்ணம் எடுத்து அரைத்த சத்துமாவு இரண்டு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும்.அடுத்து அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி மாவை கெட்டிப்படாமல் கரைக்கவும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து கால் கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பின்னர் இரண்டு தேக்கரண்டி நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.பிறகு கரைத்த சத்துமாவு சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க வைத்து பருகவும்.இந்த சத்துமாவு கஞ்சி உடலை திடமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.