Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தினமும் இந்த Coffee குடித்தே பாடி வெயிட்ட சுலமாக குறைக்கலாம்!! நம்புங்க இது அனுபவ உண்மை!!

Drink this coffee daily and lose weight easily!! Trust me this is empirical fact!!

Drink this coffee daily and lose weight easily!! Trust me this is empirical fact!!

தினமும் இந்த Coffee குடித்தே பாடி வெயிட்ட சுலமாக குறைக்கலாம்!! நம்புங்க இது அனுபவ உண்மை!!

சூடான காபியில் எலுமிச்சை சாறு அல்லது நெய் சேர்த்து அருந்தி வந்தால் உடல் எடை குறையும் என்பது மருத்துவர்களின் கூற்று.உங்களில் பெருமபாலானோருக்கு காபி குடிப்பது பிடித்தமான விஷயமாக இருக்கும்.

ஆனால் பாலில் காபி பொடி,சர்க்கரை சேர்த்து அருந்துவதால் அவை உடல் ஆரோக்கியத்தை முழுமையாக கெடுத்து விடும்.

பாலுக்கு பதில் தண்ணீரில் காபி பொடி சேர்த்து கொதிக்க விட்டு எலுமிச்சை சாறு அல்லது நெய் சேர்த்து குடிக்கலாம்.சுவைக்காக சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.இந்த முறையில் காபி போட்டு குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறைந்து விடும்.

தேவையான பொருட்கள்:-

1)காபி பொடி – அரை ஸ்பூன்

2)தேன் – இரண்டு ஸ்பூன்

3)எலுமிச்சை சாறு – இரண்டு ஸ்பூன்

4)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் அரை ஸ்பூன் வாசனை மிகுந்த காபி பொடி சேருங்கள்.

எந்த பிராண்ட் காபி பொடியாக இருந்தாலும் சரி.இந்த காபியை 2 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.

இந்த காபியை காலை நேரத்தில் செய்து குடித்து வந்தால் உடல் எடை மெல்ல மெல்ல குறைந்து விடும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)காபி பொடி – 1/2 ஸ்பூன்

2)தண்ணீர் – 1 கிளாஸ்

3)தேன் – தேவைக்கேற்ப

4)நெய் – 1 ஸ்பூன்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் அரை ஸ்பூன் வாசனை மிகுந்த காபி பொடி சேருங்கள்.இந்த காபியை 2 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு ஸ்பூன் நெய் மற்றும் தேவையான அளவு தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.

இந்த காபியை காலை நேரத்தில் செய்து குடித்து வந்தால் உடல் எடை மெல்ல மெல்ல குறைந்து விடும்.

Exit mobile version