மாரடைப்பு வராமல் இருக்க “கொத்தமல்லி இலை தேநீர்” இப்படி செய்து பருகுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!
வாசனைக்காக உணவில் சேர்க்கும் கொத்தமல்லி இலைகளில் அதிகளவு இரும்புச் சத்து,
வைட்டமின் ஏ,சி, கே,மாங்கனீஸ்,கால்சியம்,பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் நிறைந்து இருக்கிறது.
இவை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதோடு,உடலில் உள்ள பல்வேறு நோய் பாதிப்புகளை சரி செய்ய பெரிதும் உதவுகிறது.
இந்த இலையில் டீ போட்டு குடித்தால் செரிமானக் கோளாறு,இரத்த அழுத்தம்,
சரும பாதிப்பு,உடல் பருமன் பாதிப்பு உள்ளிட்டவை சரியாகும்.அதேபோல் இளம் வயது மாரடைப்பு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க கொத்தமல்லி இலையில் டீ போட்டு பருகுங்கள்.
தேவையான பொருட்கள்:-
*கொத்தமல்லி இலை – 1/4 கப்
*அன்னாசி மொக்கு – 1
*மஞ்சள் தூள் – 1 சிட்டிகை அளவு
செய்முறை:-
அடுப்பில் டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர்
பிரியாணிக்கு பயன்படுத்தும் அன்னாசி மொக்கு 1 மற்றும் மஞ்சள் தூள் 1 சிட்டிகை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
பின்னர் அதில் எடுத்து வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை சேர்த்து 2 நிமிடம் வரை கொதிக்க விடவும்.பின்னர் அடுப்பை அணைத்துக் கொள்ளவும்.
இந்த கொத்தமல்லி இலை தேநீரை ஒரு டம்ளருக்கு வடிகட்டி தேவையான அளவு தேன் சேர்த்து பருகவும்.