கடுமையான காய்ச்சல் சளி குணமாக இந்த கசாயம் வச்சி குடியுங்கள்!! மருத்துவ செலவே ஏற்படாது!

0
304
Drink this decoction to cure severe fever and cold!! No medical expenses!

கடுமையான காய்ச்சல் சளி குணமாக இந்த கசாயம் வச்சி குடியுங்கள்!! மருத்துவ செலவே ஏற்படாது!

நவீன காலகட்டத்தில் சளி,காய்ச்சல்,இருமல் பாதிப்பு அனைவருக்கு வரக் கூடிய சாதாரண பாதிப்பாக மாறிவிட்டது.சுகாதாரமற்ற குடிநீர்,மாசடைந்த காற்று,ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம்,மாறிவரும் காலநிலை போன்ற காரணங்களால் இதுபோன்ற பல னாய் பாதிப்புகள் மனிதர்களை எளிதில் தொற்றிவிடுகிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதால் காய்ச்சல் ஏற்படும்.எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து காய்ச்சல் பாதிப்பை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு கசாயம் செய்து குடியுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பங்குச்சி – சிறிதளவு

2)கரு மிளகு – 1/2 தேக்கரண்டி

3)சீரகம் – 1/2 தேக்கரண்டி

4)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

5)இஞ்சி – 1 துண்டு

6)கறிவேப்பிலை குச்சி – சிறிதளவு

7)உப்பு – சிட்டிகை அளவு

செய்முறை:-

சிறிதளவு வேப்பங்குச்சி மற்றும் கறிவேப்பிலை குச்சி எடுத்து சுத்தம் செய்து பொடியாக நறுக்க வேண்டும்.

அதன் பின்னர் 1/2 தேக்கரண்டி மிளகு,1/2 தேக்கரண்டி சீரகத்தை லேசாக வறுத்து ஒரு உரலில் போட்டு இடித்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.இதை ஒரு தட்டிற்கு மாற்றி விடவும்.

அடுத்து ஒரு துண்டு இஞ்சி எடுத்து தோல் நீக்கி கழுவி சுத்தம் செய்யவும்.இதையும் உரலில் போட்டு தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் 250 மில்லி தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் நறுக்கிய வேப்பிலை குச்சி மற்றும் கறிவேப்பிலை குச்சியை அதில் சேர்க்க வேண்டும்.

அடுத்து வறுத்து அரைத்த கரு மிளகு மற்றும் சீராகப் பொடியை அதில் சேர்க்க வேண்டும்.அதன் பின்னர் இடித்த இஞ்சி,1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

250 மில்லி தண்ணீர் 150 மில்லியாக வரும் அளவிற்கு கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த கசாயத்தை நன்கு ஆறவிட்டு வடிகட்டி குடித்து வந்தால் காய்ச்சல்,தலைவலி முழுமையாக குணமாகும்.