Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சுவாச பாதையில் தேங்கி கிடக்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இந்த கசாயம் செய்து குடிங்கள்!

#image_title

சுவாச பாதையில் தேங்கி கிடக்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இந்த கசாயம் செய்து குடிங்கள்!

காலநிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி, இருமல் ஏற்படுவது சாதாரண ஒன்று தான். இவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக் கூடிய ஒன்று. இந்த பாதிப்புகளை மருந்து, மாத்திரை இன்றி வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி குணப்படுத்திக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:-

1)சுக்கு பொடி 1/4 ஸ்பூன்
2)தூதுவளை பொடி 1 ஸ்பூன்
3)ஏலக்காய் பொடி சிட்டிகை அளவு
4)மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
5)கருந்துளசி பொடி 1 ஸ்பூன்
6)ஆடாதோடை 1/2 ஸ்பூன்

அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வாங்கி வந்து பயன்படுத்தவும்.

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 250 மில்லி தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். தண்ணீர் சூடானதும் சுக்கு பொடி, தூதுவளை பொடி, ஏலக்காய் பொடி, கருந்துளசி பொடி மற்றும் ஆடாதோடை இலை பொடி சேர்த்து கொதிக்க விடவும்.

250 மில்லி தண்ணீர் 150 மில்லியாக வந்ததும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பாத்திரத்தை ஒரு தட்டு போட்டு மூடி 10 நிமிடங்கள் ஆற விடவும்.

பிறகு இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி குடிக்கவும். இந்த கசாயம் சுவாச பாதையில் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற உதவுகிறது.

Exit mobile version