Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த பானத்தை தொடர்ந்து 21 நாட்கள் குடிங்க!! 5 கிலோ எடை குறைஞ்சிடுவீங்க!!

Drink this drink continuously for 21 days!! Lose 5 kg weight!!

Drink this drink continuously for 21 days!! Lose 5 kg weight!!

நமது உடலில் வயிறு மற்றும் தொடை பகுதியில் தான் அதிகளவு கொழுப்பு சேர்கிறது.அதிக கொழுப்பு நிறைந்து காணப்படும் உணவுகள்,எண்ணெய் உணவுகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடல் பருமன் ஏற்பட்டுவிடும்.

இதை ஆரம்ப நிலையில் கவனிக்க தவறினால் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும்.எனவே உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க தினம் ஒரு மூலிகை பானம் செய்து பருகுங்கள்.

**சீரகம் – ஒரு தேக்கரண்டி
**தண்ணீர் – ஒரு கிளாஸ்

காலையில் எழுந்ததும் இதை செய்ய வேண்டும்.இதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.

பிறகு ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து தண்ணீர் நிறம் மாறும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

பிறகு இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி பருக வேண்டும்.தொடர்ந்து 21 நாட்கள் சீரக பானம் பருகி வந்தால் வயிறு,தொடை உள்ளிட்ட பகுதியில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து ஸ்லிம்மாக தெரிவீர்கள்.

**லெமன் ஜூஸ் – இரண்டு தேக்கரண்டி
**தண்ணீர் – ஒரு கிளாஸ்

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி எலுமிச்சை சாறை பிழிந்து பருக வேண்டும்.எலுமிச்சை பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் ஊளை சதை குறைந்து உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.

**ஓமம் – ஒரு தேக்கரண்டி
**ஜீரா – ஒரு தேக்கரண்டி
**தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்

பாத்திரத்தில் ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து சூடாக்கவும்.அதன் பிறகு ஓமம் மற்றும் ஜீராவை லேசாக இடித்து சூடாகி கொண்டிருக்கும் தண்ணீரில் கொட்டி கொதிக்க வைக்கவும்.

பிறகு இதை வடிகட்டி எலுமிச்சை சாறு கலந்து பருகினால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த பானம் கைகொடுக்கும்.

Exit mobile version