Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெறும் 7 நாட்களில் கண் பார்வை தெளிவடைய செய்யும் பாட்டி வைத்தியம்!

நாம் இப்பொழுது பார்க்க இருக்கும்இந்த முறையானது கண் பார்வை சரி செய்வதோடு மட்டுமல்லாமல் கால்சியம் குறைபாட்டை சரிசெய்யும். இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மொபைல் போன்களை பார்த்து கண் குறைபாடுகள் ஏற்பட்டு விடுகின்றன. கண் எரிச்சல், கண் பார்வை சரிசெய்ய இந்த பாட்டி வைத்தியத்தை எப்படி செய்யலாம் என்பதை வாருங்கள் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. கருப்பு எள்/ வெள்ளை எள்

2. நாட்டு சக்கரை

3. பாதாம் பருப்பு

4. பால் ஒரு டம்ளர்

செய்முறை:

1. முதலில் தேவைப்படும் அளவிற்கு வெள்ளை எள் அல்லது கருப்பு எள்ளை எடுத்து மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.

2. இப்பொழுது இந்த எள்ளை மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும்.

3. 3 ஸ்பூன் அளவுக்கு மூன்று பாதாம் பருப்புகளை போடவும். ஒரு ஸ்பூன் அளவிற்கு ஒரு பாதாம்பருப்பு என்ற விகிதத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

4. நன்றாக பொடித்து கொள்ளவும்.

5. பின் மிதமான சூட்டில் உள்ள ஒரு டம்ளர் பாலை எடுத்துக் கொள்ளவும்.

6. அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு பொடித்து வைத்த எள் பாதாம்பருப்பு பொடியை போடவும்.

7. பின் ஒரு ஸ்பூன் அளவிற்கு நாட்டுச் சர்க்கரையை சேர்த்து கலந்து கொள்ளவும்.

இதனை இரவு சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து குடித்து விட்டு 10 நிமிடம் கழித்து படுக்கச் செல்லலாம்.

இதனை நீங்கள் தொடர்ந்து 7 நாட்கள் வரை குடித்துவர உங்களுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதோடு கண் பார்வையையும் சரிசெய்து குறைபாடுகளையும் தீர்க்கும்.

உங்களால் முடிந்தால் தொடர்ந்து குடித்து வரலாம்

Exit mobile version