கோடை காலத்தில் இந்த ஜுஸ் குடிங்க!! உடம்பு சும்மா செம கூலா இருக்கும்!!

0
231
#image_title

நம்முடைய உடல் சூடு, சாதரணமாக இருக்கிற அளவை விட வெயில் காலத்தில் மிகவும் அதிகமாக இருக்கும். வெயில் காலத்தில் நம்முடைய உடலில் நீர்ச்சத்து குறைந்து, தொண்டை வறண்டு நமக்கு தாகம் அதிக அளவில் ஏற்பட்டு தண்ணீர் அதிகமாக குடிப்போம்.

தண்ணீர் உடலுக்கு நல்லதுதான். ஆனால் தண்ணீர் அதிகமாக குடிக்கும் போது நம்மால் சரியாக சாப்பிட முடியாது. சரியாக சாப்பிடாத காரணத்தினால் மலச்சிக்கல் ஏற்படும். அதே போல் உடல் சூட்டினால் வயிற்று வலி, வயிற்று கடுப்பு போன்ற உபாதைகள் ஏற்படும். உடல் சூட்டினால் நமக்கு அதிக சோர்வும் உண்டாகிறது.

இந்த உடல் சூட்டினை குறைப்பதற்கான சில ஜுஸ் வகைகளை பார்ப்போம்.

நெல்லிக்காய் ஜுஸ்

ஒரு 3 நெல்லிக்காயை கட் செய்து சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு அதை வடிகட்டி அதில் சிறிது உப்பு, 1 ஸ்பூன் தேன் கலந்து குடித்து வரவும். நெல்லிக்காய் மிகவும் குளிர்ச்சியானது. இது உடல் சூட்டை தணிக்கும்.

மாதுளை ஜுஸ்

மாதுளையை பிரித்து அதன் உள்ளே இருக்கும் முத்துக்களை எடுத்துக்கொள்ளுங்கள் அதனுடன் சிறிதளவு காய்ச்சிய பால், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அரைத்து கொள்ளவும். இதை தினமும் 1 கிளாஸ் குடித்து வருவதால், இரத்த அணுக்கள் அதிகரிப்பதோடு, உடலை குளிர்ச்சியாக வைக்கிறது.

வெள்ளரி ஜுஸ்

கோடை வெப்பத்தை தணிக்க வெள்ளரி ஜுஸ் சிறந்தது. இது உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. இதை வெள்ளரிக்காயாக சாப்பிடும்போது உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்கிறது.

முதலில் வெள்ளரிக்காயை தோல் சீவிக்கொள்ளவும். பிறகு அதை கட் செய்து மிக்சி ஜாரில் போட்டு, அதனுடன் சிறிதளவு இஞ்சியை போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு அதை வடிகட்டி, அதனுடன் 1/2 எலுமிச்சம் பழச்சாறு, சீரகப்பொடி, தேன் இவற்றை கலந்து கொள்ளவும்.

இந்த ஜூசை வாரத்தில் 3அல்லது 4 முறை எடுத்து கொள்ளலாம்.