தேய்ந்த எலும்புகள் வலுப்பெற.. இனி மூட்டுவலி வராமல் இருக்க இந்த பாலை பருகுங்கள்!!

0
262
Drink this milk to strengthen worn out bones.. no more arthritis!!

தேய்ந்த எலும்புகள் வலுப்பெற.. இனி மூட்டுவலி வராமல் இருக்க இந்த பாலை பருகுங்கள்!!

மனிதருக்கு பலமே அவர்களது எலும்புகள் தான்.எலும்புகள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே முதுமை காலத்தில் மூட்டு வலி,கை கால் வலி,முதுகு வலி போன்ற பாதிப்புகளை சந்திக்காமல் இருக்க முடியும்.

ஆனால் இன்று இளைய தலைமுறையினர் பலர் எலும்பு தொடர்பான பாதிப்புகளால் அவதியடைந்து வருகின்றனர்.இந்த பாதிப்பை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள ஊட்டச்சத்து பவுடரை பாலில் கலந்து குடியுங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:

1)கருப்பு உளுந்து
2)ஜவ்வரிசி
3)ஏலக்காய்
4)சுக்கு
5)கருப்பு எள்
6)பார்லி அரிசி
7)பனங்கற்கண்டு

செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு கப் கருப்பு உளுந்து சேர்த்து மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அரை கப் ஜவ்வரிசி,1/4 கப் கருப்பு எள்,1/4 கப் பார்லி அரிசி,ஒரு துண்டு சுக்கு மற்றும் 4 ஏலக்காயை தனி தனியாக வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக இந்த பொருட்கள் அனைத்தையும் நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

இறுதியில் இனிப்பு சுவைக்காக 1/4 கப் பனங்கற்கண்டு சேர்த்து நைஸ் பவுடராக்கி கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் பால் சேர்த்து கொதிக்க விடவும்.5 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அரைத்த பவுடர் இரண்டு தேக்கரண்டி அளவு சேர்த்து கலக்கி குடித்தால் எலும்பு தொடர்பான பாதிப்புகள்,மூட்டு வலி,மூட்டு வீக்கம் அனைத்தும் குணமாகும்.

தேவைப்படும் பொருட்கள்:

1)வெள்ளை உளுந்து
2)பாதாம் பருப்பு
3)முந்திரி பருப்பு
4)ஏலக்காய்
5)பொட்டுக்கடலை
6)பச்சை பயறு
7)பாசி பருப்பு

செய்முறை:

ஒரு வாணலியில் 1/4 கப் வெள்ளை உளுந்து,10 பாதாம் பருப்பு.10 முந்திரி பருப்பு,2 ஏலக்காய்,2 தேக்கரண்டி பொட்டுக்கடலை,1/4 கப் பச்சை பயறு மற்றும் 1/4 கப் பாசி பருப்பு சேர்த்து குறைவான தீயில் வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

பிறகு இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 200 மில்லி பால் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த பாலில் அரைத்த சத்து பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து கலக்கி பருகவும்.டீ,காபிக்கு பதில் இந்த பாலை பருகி வந்தால் எலும்பு தொடர்பான பாதிப்புகள் முழுமையாக குணமாகும்.