மழைக்காலம்,பனி காலத்தில் மூக்கடைப்பு,வறட்டு இருமல் ஏற்படுவது சாதாரண விஷயம்.இதை சரி செய்ய மருந்து,மாத்திரை எடுத்துக் கொண்டாலும் எளிதில் அதை கட்டுப்படுத்த முடியாது.வறட்டு இருமலுக்கு வீட்டு வைத்தியம் தான் சிறந்த தீர்வாக இருக்கிறது.
வறட்டு இருமல் எதனால் ஏற்படுகிறது?
*தொண்டை கரகரப்பு
*உள் நாக்கு வளர்ச்சி
*புகைப்பழக்கம்
*நாள்பட்ட இருமல்
*மூச்சு குழாய் வீக்கம்
*நிமோனியா
*தொண்டை பிரச்சனை
தேவையான பொருட்கள்:
1)கடுகு
2)தேன்
பயன்படுத்தும் முறை:
அடுப்பில் ஒரு சிறிய கடாய் வைத்து மிதமான தீயில் சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கடுகு சேர்த்து கருகிடாமல் வறுக்கவும்.இதை நன்கு ஆறவிட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு சிறிய பவுல் ஒன்றை எடுத்து பொடித்த கடுகுத் தூளை அதில் சேர்க்கவும்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி தூயத் தேனை அதில் ஊற்றி கலந்து தொண்டையில் படும்படி சாப்பிடவும்.இவ்வாறு செய்வதால் வறட்டு இருமலுக்கு தீர்வு கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:
1)மஞ்சள் பொடி
2)தண்ணீர்
3)தேன்
பயன்படுத்தும் முறை:
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிதளவு தேன் கலந்து குடித்தால் வறட்டு இருமல் பாதிப்பு குணமாகும்.
தேவையான பொருட்கள்:
1)அஸ்வகந்தா பொடி
2)தேன்
பயன்படுத்தும் முறை:
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் அஸ்வகந்தா பொடி தேவையான அளவு வாங்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி அஸ்வகந்தா பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு மிக்ஸ் செய்து சாப்பிடவும்.இதை ரெகுலராக எடுத்துக் கொண்டால் வறட்டு இருமல் பாதிப்பிற்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:
1)வெற்றிலை
2)கற்பூரவல்லி இலை
3)தேன்
செய்முறை:
ஒரு வெற்றிலையை காம்பு நீக்கி உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு கற்பூரவல்லி இலையை இடித்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.இதை இரண்டையும் ஒரு கிண்ணத்திற்கு மாற்றி சிறிதளவு தேன் கலந்து வெறும் வயற்றில் குடித்து வந்தால் வறட்டு இருமல் பாதிப்பு முழுமையாக சரியாகும்.