Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொந்தி குறைய காலையில் இதை மட்டும் குடியுங்கள்! 30 நாட்களில் வயிறு தட்டையாகிவிடும்!

Drink this only in the morning to reduce anxiety! Get a flat stomach in 30 days!

Drink this only in the morning to reduce anxiety! Get a flat stomach in 30 days!

தொந்தி குறைய காலையில் இதை மட்டும் குடியுங்கள்!! 30 நாட்களில் வயிறு தட்டையாகிவிடும்!!

உடல் எடை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமான ஒன்று.தேகம் ஒல்லியாக இருந்தாலும் வயிற்றுப்பகுதியில் மட்டும் கொழுப்பு அதிகம் சேர்ந்து தொந்தி உருவாகிவிட்டது என்று வருத்தப்படுபவர்கள் மனம் தளராமல் கீழ்கண்ட சித்த வைத்தியத்தை 30 நாட்களுக்கு கடைபிடித்து வந்தால் நிச்சயம் அற்புதமான பலன் கிடைக்கும்.

1)நெல்லிக்காய்
2)கறிவேப்பிலை
3)மிளகு
4)தூள் உப்பு
5)தேன்

மூன்று மலை நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் விதையை அப்புறப்படுத்தி விட வேண்டும்.

பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலையை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் நறுக்கி வைத்த மலை நெல்லி துண்டுகள் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்க வேண்டும்.

பின்னர் நான்கு மிளகு மற்றும் சிட்டிகை அளவு தூள் உப்பு சேர்க்க வேண்டும்.இறுதியாக தங்களுக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மைய அரைத்து எடுக்க வேண்டும்.

இப்பொழுது ஒரு கிளாஸ் எடுத்து அரைத்த ஜூஸை அதில் வடிகட்டி தேன் சேர்த்து அருந்தி வந்தால் தொப்பை கொழுப்பு கரைந்துவிடும்.

1)சோற்றுக்கற்றாழை
2)மோர்

ஒரு சோற்றுக்கற்றாழை மடல் எடுத்து அதன் முள் பகுதியை நீக்கி கொள்ள வேண்டும்.அதன் பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு 4 முதல் 5 முறை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து மிக்ஸி ஜார் எடுத்து கற்றாழை துண்டுகளை சேர்க்க வேண்டும்.இதனுடன் ஒரு கப் மோர் சேர்த்து அரைத்து குடித்து வந்தால் வயிற்றுப்பகுதியில் காணப்படும் தொப்பை கொழுப்பு முழுமையாக கரைந்துவிடும்.

1)தேன்
2)வெந்நீர்

காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் வெந்நீரில் சிறிதளவு தேன் மிக்ஸ் செய்து பருகி வந்தால் தொப்பை குறையும்.

1)வெந்நீர்
2)எலுமிச்சை சாறு

ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மிக்ஸ் செய்து குடித்து வந்தால் தொப்பை கொழுப்பு குறைந்துவிடும்.

Exit mobile version