Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொழுகொழுவென்று தொங்கும் தொப்பை குறைய இது மட்டும் குடித்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்!

ஒரு சிலர் பார்ப்பதற்கு ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு தொப்பை மட்டும் முன்னாடி வந்து நிற்கும். இதை குறைக்க பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தியும் தீரவில்லையா? இதோ உங்களுக்கான அருமையான இயற்கை வழி.

தேவையான பொருட்கள்:
1. அரை ஸ்பூன் பட்டை தூள்
2. இஞ்சி ஒரு துண்டு
3. எலுமிச்சை பழம் ஒன்று
4. தேன் 2 ஸ்பூன்.

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து விடவும்.
2. அந்த கொதித்த தண்ணீரை ஒரு டம்ளரில் ஊற்றவும்.
3. இப்பொழுது அந்த தண்ணீரில் அரை டீஸ்பூன் பட்டை தூள் சேர்க்கவும்.
4. பின் ஒரு துண்டு இஞ்சியை எடுத்து லேசாக நசுக்கி அந்த தண்ணீரில் போட்டுக் கொள்ளவும்.
5. பிறகு எலுமிச்சை பழத்தை எடுத்து தோலோடு 2 சிறிய லேசாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
6. அதை அப்படியே அந்த தண்ணீரில் போட்டு விடவும்.
7. இப்பொழுது இந்த கலவை தண்ணீரை 10 நிமிடங்களுக்கு மூடி வைத்து விடவும்.
8. பத்து நிமிடங்களுக்குப் பிறகு அதனை வடிகட்டி இளம் சூட்டில் இருக்கும் பொழுது இரண்டு ஸ்பூன் அளவு தேனை கலந்து குடிக்கலாம்.

இதனை டீ காபிக்கு பதிலாக காலையில் வெறும் வயிற்றில் அருந்தலாம்.இந்த மூன்று பொருட்களுமே உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரித்து உங்கள் உடம்பில் உள்ள நச்சுக்களை மற்றும் கொழுப்புகளை வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றது.
இதனை ஒரு வாரம் குடித்து வாருங்கள் உங்களது உடலில் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

Exit mobile version