Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ஒற்றை கஷாயம் குடிங்க.. எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் பறந்து போகும்!!

இந்த ஒற்றை கஷாயம் குடிங்க.. எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் பறந்து போகும்!!

தற்பொழுது இருக்கும் டீன் ஏஜ் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டாயம் இந்த மூட்டு வலி என்ற பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். சிறுவயதிலேயே இந்த மூட்டு வலியால் தற்பொழுது இளைஞர்கள் அவதிப்படும் நிலைமைக்கு வந்துவிட்டது.

மாறுபட்ட உணவு பழக்க வழக்கங்கள் இதற்கு முக்கிய காரணம் என்றாலும் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்காததும் இவ்வாறு வலி ஏற்பட மூலதனமாக அமைகிறது.

என்னதான் மருத்துவர்கள் கால்சியம் நிறைந்த உணவு பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினாலும் மக்கள் அதனை செவி கொடுத்து கூட கேட்டுக் கொள்வதில்லை.

அதை தவிர்த்து விட்டு பின்பு அதிகப்படியான வலி ஏற்படும் பொழுது மருந்து மாத்திரை போன்றவற்றையே நாடுகின்றனர். ஆனால் மருந்து மாத்திரை இல்லாமல் ஆரம்ப கட்டத்தில் இருந்து உணவு பழக்க வழக்கத்தில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்தினாலே வலி வருவதை தடுக்கலாம்.

இதை அனைத்தையும் மீறி வலியால் அவதிப்படுபவர்கள் இந்த பதிவில் வரும் கசாயத்தை குடித்தால் போதும். மூட்டு வலி இருக்கும் இடம் தெரியாமல் பறந்து போகும்.

தேவையான பொருட்கள்:

சீரகம். 1 ஸ்பூன்

கொத்தமல்லி விதை 1 ஸ்பூன்

கிராம்பு 1 ஸ்பூன்

பட்டை. இரண்டு துண்டு

சோம்பு. 1 ஸ்பூன்

மிளகு. 1 ஸ்பூன்

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் முந்தைய நாள் இரவே ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

பின்பு அதனை தனியாக வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தனியாக வடிகட்டி எடுத்துக்கொண்ட அந்த கசாயத்தை அப்படியே ஒரு இரவு முழுவதும் மூடி வைக்க வேண்டும்.

பின்பு மறுநாள் காலையில் அந்த கசாயத்தை வெறும் வயிற்றில் குடித்து வர எப்பேர்பட்ட மூட்டு வலியும் நிவர்த்தியாகும்.

இந்த கசாயத்தால் மூட்டு வலி மட்டுமின்றி செரிமான கோளாறு தைராய்டு போன்ற மற்ற சில பிரச்சனைகளும் குணமாகும்.

Exit mobile version