வாரத்துக்கு ஒரு நாள் இந்த சூப்பை குடிங்க!! உடல் எடை தொப்பை குறைந்து மொத்த ஆரோக்கியமும் உங்கள் கையில்!!

0
102
#image_title

வாரத்துக்கு ஒரு நாள் இந்த சூப்பை குடிங்க!! உடல் எடை தொப்பை குறைந்து மொத்த ஆரோக்கியமும் உங்கள் கையில்!!

நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமாக இருந்தால் உடலில் பிரச்சனை என்று மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அந்த வகையில் நமது உடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு வகையான சூப்பை பற்றி தற்போது பார்ப்போம்.

வாரத்திற்கு ஒரு நாளாவது இந்த சூப்பை வீட்டிலேயே தயார் செய்து குடிக்க உங்கள் உடல் எடை குறையும். தொப்பை கரையும். உடம்பில் உள்ள கொழுப்பை எல்லாம் கரைந்து வெளியேறும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

வாரத்திற்கு ஒரு நாளாவது இந்த சூப்பை வீட்டிலேயே தயார் செய்து குடிக்க உங்கள் உடல் எடை குறையும். தொப்பை கரையும். உடம்பில் உள்ள கொழுப்பை எல்லாம் கரைந்து வெளியேறும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விடவும். அதிலேயே ஒரு முக்கால் ஸ்பூன் சீரகம் போடவும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் 5 சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்க்கவும்.

அடுத்து ஒரு பச்சை மிளகாய், 2 பல் பூண்டு நறுக்கி சேர்க்கவும். அடுத்ததாக 5 பீன்ஸ் மற்றும் ஒரு கேரட் சின்ன சின்னதாக நறுக்கி சேர்க்கவும். அடுத்ததாக பாதி அளவு குடைமிளகாயை நறுக்கி சேர்க்கவும்.

சேர்த்த காய்கறிகள் அனைத்தையும் நன்றாக வதக்கவும். பின்னர் இரவே ஊற வைத்த கால் கப் பச்சை பட்டாணியை அதில் சேர்க்கவும். அடுத்ததாக ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, சேர்த்து நன்றாக வதக்கி பின்னர் ஒன்றரை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

அடுத்ததாக தனியாக ஒரு பவுலை எடுத்துக்கொண்டு அதில் 3 ஸ்பூன் ராகி மாவை எடுத்துக் கொள்ளவும். இதில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. இதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். இதை நேரடியாக சூப்பில் சேர்க்கக்கூடாது. தனியாக கரைத்து தான் சேர்க்க வேண்டும். இல்லை எனில் நன்றாக கட்டிப் பிடித்து விடும்.

ராகி மாவு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும். உடல் எடையையும் குறைக்கும். கரைத்து வைத்திருக்கும் ராகி மாவை கொதித்துக் கொண்டிருக்கும் காய்கறி கலவையில் ஊற்றி நன்கு கெட்டிப்படும் வரை கிளறவும். அடுத்து ஒரு அரை ஸ்பூன் மிளகு எடுத்துக் கொண்டு தட்டி கொதித்துக் கொண்டிருக்கும் சூப்பில் சேர்க்கவும்.

ஓரளவு கெட்டிப்பட்டதும் எடுத்து இதனை பருகலாம். இது மிகவும் சுவையான பானம் மட்டுமில்லாமல் ஆரோக்கியமானதும் கூட.