நாள்பட்ட சளியை முழுமையாக வெளியேற்ற இந்த ஒரு டீ யை குடியுங்கள்!! 100% நிரந்தர தீர்வு!! 

0
357
Drink this tea to get rid of chronic cold completely!! 100% Permanent Solution!!

நாள்பட்ட சளியை முழுமையாக வெளியேற்ற இந்த ஒரு டீ யை குடியுங்கள்!! 100% நிரந்தர தீர்வு!!

சளி,இருமல் பாதிப்பு எப்பொழுது ஏற்பட்டாலும் அவை அசௌவ்கரிய சூழலை தான் ஏற்படுத்தும்.இந்த பாதிப்பு எற்பட்டாலோ தொண்டை வலி,காய்ச்சல்,தலைபாரம் உள்ளிட்டவைகள் உருவாகி நமக்கு தீராத பாதிப்பாக மாறிவிடும்.இந்த சளி,இருமல் பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபட வீட்டு வைத்தியங்கள் கட்டாயம் உதவியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)சிங்கவல்லி(கற்பூரவல்லி) – 2
2)டீத்தூள்
3)இஞ்சி
4)ஏலக்காய்
5)மிளகு

செய்முறை:-

பாத்திரம் ஒன்று எடுத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.பிறகு ஒரு ஏலக்காய்,ஒரு துண்டு இஞ்சி மற்றும் நான்கு மிளகை உரலில் போட்டு தட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது தண்ணீர் சூடானதும் ஒரு தேக்கரண்டி டீத்தூள் சேர்த்து ஒரு கொதிவிடவும்.அதன் பின்னர் தட்டி வைத்த இஞ்சி கலவையை அதில் போட்டு 3 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு ஒரு கிளாஸிற்கு வடித்துக் கொள்ள வேண்டும்.

இந்த டீயில் சுவைக்காக சிறிது தேன் சேர்த்து பருகினால் நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுக்கின்ற சளி,இருமல் சில நிமிடங்களில் குணமாகும்.

கற்பூரவல்லி கசாயம்:

தேவையான பொருட்கள்:-

1)சீரகம்
2)மிளகு
3)கற்பூரவல்லி இலை
4)சுக்கு

செய்முறை:-

இரண்டு கற்பூரவல்லி இலையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு உரலில் 1/4 தேக்கரண்டி சீரகம் மற்றும் 1/4 தேக்கரண்டி மிளகு சேர்த்து கொரகொரப்பாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் ஒரு துண்டு சுக்கை லேசாக சூடுபடுத்தி பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி பொடியாக நறுக்கி கற்பூரவல்லி இலை,இடித்த சீரகம் மற்றும் மிளகு சேர்த்து கலந்து விடவும்.பிறகு இடித்த சுக்குப்பொடி சேர்த்து அடுப்பில் வைத்து 5 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் நெஞ்சில் தேங்கிய சளி கரைந்து நாசியில் வெளியேறிவிடும்.பூண்டு,வெற்றிலை,துளசி போன்ற பொருட்களை சேர்த்தும் கசாயம் செய்து குடித்து வரலாம்.