இனிப்பு உணவுகள் மற்றும் வாசனை திரவங்கள் தயாரிக்க பயன்படுத்தும் குங்குமப்பூ அதிக விலை கொண்ட மூலிகை ஆகும்.ஒரு கிலோ குங்குமப் பூ கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த குங்குமப் பூ கவர்ச்சியான நிறம் அருமையான வாசனையை கொண்டிருப்பதால் அனைவரும் இதை உட்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.இந்த குங்குமப் பூவை பாலில் கலந்து பருகி வந்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.
குங்குமப் பூ ஊட்டச்சத்துக்கள்:
*பாஸ்பரஸ்
*கால்சியம்
*மெக்னீசியம்
*இரும்பு
*பொட்டாசியம்
*வைட்டமின் ஏ,பி,சி
*புரதம்
*துத்தநாகம்
*செலினியம்
குங்குமப் பூ பாலின் நன்மைகள்
1)பாலில் குங்குமப் பூ சேர்த்துப் பருகி வந்தால் உடலில் தழும்பு புண்கள் மெல்ல மெல்ல ஆறிவிடும்.
2)குங்குமப் பூ கலந்த பால் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.குங்குமப் பூவில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் உடலில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளாக செயல்படுகிறது.
3)தினமும் குங்குமப் பூ பால் பருகி வந்தால் முகப்பருக்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
4)குங்குமப் பூவில் கரோட்டினாய்டுகள் அதிகளவில் இருக்கின்றது.இந்த குங்குமப் பூவை பாலில் கலந்து பருகினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
5)உடலை வலுவாக வைத்துக் கொள்ள குங்குமப் பூ பால் செய்து பருகலாம்.இதனால் விளையாட்டு வீரர்கள் இந்த குங்குமப் பூவை தொடர்ந்து எடுத்துக் கொள்கின்றனர்.
6)உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க குங்குமப் பூ பால் உதவுகிறது.மூளை சோர்வு நீங்க குங்குமப் பூ பால் செய்து பருகலாம்.
7)மூளையின் ஆரோக்கியம் மேம்பட குங்குமப் பூ பால் பருகலாம்.மூளைக்கு செல்லும் நரம்புகளின் செயல்பாட்டை இந்த பால் அதிகரிக்கிறது.
8)வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும் ஆற்றல் குங்குமப் பூவிற்கு உண்டு.எனவே குங்குமப் பூவை பாலில் கலந்து பருகினால் அல்சர் புண்,குடல் புண் போன்றவை குணமாகும்.
9)கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் குங்குமப் பூவிற்கு உண்டு.தொடர்ந்து குங்குமப் பூ பால் பருகி வந்தால் விழித்திரை சிதைவு ஏற்படுவது தடுக்கப்படும்.
10)உடலில் படியும் தேவையற்ற நச்சுக் கழிவுகளை அகற்ற குங்குமப் பூ பால் செய்து பருகலாம்.