பிளாஸ்டிக் கப்பில் டீ குடித்தால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்படுமா!!? அப்போ இனி மேல் பிளாஸ்டிக் கப் யூஸ் பண்ணாதீங்க!!!

0
209
#image_title

பிளாஸ்டிக் கப்பில் டீ குடித்தால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்படுமா!!? அப்போ இனி மேல் பிளாஸ்டிக் கப் யூஸ் பண்ணாதீங்க!!!

பிளாஸ்டிக் கப்பில் டீ, காபி போன்ற சூடான பானங்களை அருந்தும் பொழுது நமது உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படுகின்றது. அந்த பாதிப்புகள் உடனே நமக்கு தெரியாது. நாட்கள் செல்ல செல்லத்தான் தெரியும்.

டி, காபி குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும். உடலுக்கு புத்துணர்ச்சியை தரும். சோம்பலை முறிக்கும் என்று நாம். அனைவருக்கும் தெரியும். ஆனால் நன்மைகளை தரக் கூடிய டீ, காபி போன்றவற்றை எவ்வாறு எதை பயன்படுத்தி குடிக்கிறோம் என்பது தான் கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

பெரும்பாலும் மக்கள் வெளியே செல்லும் பொழுது டீ அல்லது காபி குடிக்க ஆசைப்பட்டால் பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்பட்ட கப் அல்லது டம்ளர் மூலமாகத் தான் குடிக்கிறார்கள்.அதிலும் அலுவலகங்களுக்கு சென்றால் அங்கு பணிபுரியும் நமக்கும் பிளாஸ்டிக் கப்பில் தான் டீ அல்லது காபி சூடாகப் கொண்டு வரப்படுகின்றது. பிளாஸ்டிக் கப்பில் சூடான டீ அல்லது காபி ஊற்றி குடிப்பது உடலுக்கு நல்லது அல்ல. அது ஏன் என்று பார்க்கலாம்.

பிளாஸ்டிக் கப்பில் டீ அல்லது காபி குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்…

* பிளாஸ்டிக் கப் பயன்படுத்தி நாம் சூடாக டீ அல்லது காபி குடிக்கும் பொழுது பிளாஸ்டிக் கப்பில் இருக்கின்ற மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கடலுக்குள் செல்லும். மேலும் குடலில் ஒட்டி குடல் சம்பந்தமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

* நாம் தொடர்ந்து பிளாஸ்டிக் கப்பில் சூடாக டீ அல்லது காபி குடிக்கும் பொழுது நமக்கு புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு இருக்கின்றது.

* பிளாஸ்டிக் கப் பயன்படுத்தி காபி, டீ குடிக்கும் பொழுது மலட்டுத்தன்மை பிரச்சனையை ஏற்படுத்துகின்றது.

* டீ, காபி சூடாக பிளாஸ்டிக் கப் மூலமாக குடிக்கும் பொழுது நமக்கு நரம்பியல் குறைபாடுகளையும் ஏற்படுத்துகின்றது.

* டீ, காபி மட்டுமல்ல எந்தவொரு பானத்தையும் சூடாக பிளாஸ்டிக் கப்பில் ஊற்றி குடிக்கக் கூடாது.

* மதிய உணவு அருந்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரும் சாப்பிட்டுவிட்ட பிறகு 1 மணி நேரத்திற்கு பின்னரும் டீ குடிக்கக் கூடாது.