இதை குடித்தால் 5 நிமிடத்தில் BP குறையும்!! நம்புங்க மக்களே இது முற்றிலும் அனுபவ உண்மை!

0
364
Drinking this will reduce BP within 5 minutes!! Trust me folks this is totally empirical fact!

இதை குடித்தால் 5 நிமிடத்தில் BP குறையும்!! நம்புங்க மக்களே இது முற்றிலும் அனுபவ உண்மை!

உயர் இரத்த அழுத்தம்(BP) உலகளவில் வேகமாக பரவி வரும் பாதிப்பாக உருவெடுத்து வருகிறது.இந்த உயர் இரத்த அழுத்தத்தை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் குணமாக்கி கொள்ளலாம்.

*பூண்டு

ஒரு பல் பூண்டை இடித்து ஒரு கிளாஸ் நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

*ஓமவல்லி இலை

இரண்டு ஓமவல்லி இலையை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.இந்த சாற்றில் சிறிது தேன் சேர்த்து சாப்பிட்டால் பிபி குறையும்.

*முருங்கை விதை பொடி

ஒரு ஸ்பூன் முருங்கை விதை பொடியை ஒரு கிளாஸ் பாலில் போட்டு காய்ச்சி குடித்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

*பெரு நெல்லி

ஒரு கப் பெரு நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வத்தல் போல் காயவைத்து தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் பிபி குறையும்.

*முள்ளங்கி

ஒரு துண்டு முள்ளங்கியை மிக்ஸி ஜாரில் போட்டு 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்து குடித்து வந்தால் பிபி குறையும்.

*கருப்பு எள்

ஒரு ஸ்பூன் கருப்பு எள்ளை வறுத்து பொடி செய்து வெல்லத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

*ஏலக்காய்

ஏலக்காயை இடித்து தேநீர் செய்து குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கன்ட்ரோல் ஆகும்.

*இலவங்கம் + பட்டை

ஒரு கிளாஸ் நீரில் ஒரு துண்டு பட்டை மற்றும் 2 கிராம்பு சேர்த்து ஒரு இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் இந்த நீரை குடித்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.