தமிழக அரசுக்கு கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
அதன்படி காலியாக உள்ள ஓட்டுநர்,நடத்துனர்,தொழில்நுட்ப பணிக்காக மொத்தம் 2877 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப பலதரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.இந்த இந்நிலையில் தான் 2877 காலிப்பணியிடங்களுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் இருப்பது ஐந்தாயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கிறது என்ற குற்றசாட்டு பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த வண்ணம் இருந்தது.இந்நிலையில் தமிழ்நாட்டில் இயங்கி கொண்டிருக்கும் 8 அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அந்தவகையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளை இணைத்து 2340 டிசிசி பணிகள் மற்றும் தொழில்நுட்ப பணியிடங்களுக்காக 537 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.இதில் 769 காலிப்பணியிடங்கள் SC மற்றும் ST பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.அதாவது 307 டிசிசி மற்றும் 462 தொழில்நுட்ப பணியிடங்கள் SC மற்றும் ST பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.மீதம் 2,108 காலிப்பணியிடங்கள் இதர பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.