ஓட்டுநர்களே உஷார்:! இந்த வழக்கில் சிக்கினால் முன்ஜாமீன் கிடையாதாம்!

0
117

ஓட்டுநர்களே உஷார்:! இந்த வழக்கில் சிக்கினால்
முன்ஜாமீன் கிடையாதாம்!

கொரோனா காலத்தில் அனைத்துமே முடங்கினாலும் இந்த மணல் கடத்தல் செயல்பாடுமட்டும் ஓய்ந்தபாடில்லை.இதனை கட்டுப்படுத்த மணல் கடத்துபவர்கள் மீது உச்சநீதிமன்றம் பல்வேறு தண்டனைகள் அளித்து உத்தரவு பிறப்பித்தாலும், அவர்களுக்கு எளிதில் முன் ஜாமீன் கிடைத்து விடுவதால்,தொடர்ந்து மணல் கொள்ளை சம்பவம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமான மணல் அள்ளுவதால் நிலத்தடி நீரின் மட்டம் குறைவதோடு சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிப்படைவதாக கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம்,மணல் கடத்தல் வழக்குகளில் முன்ஜாமீன் பெற முறையீடு செய்த 40 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்ததோடு இனி மணல் கடத்தல் வழக்கில் சிக்குபவர்களுக்கு,முன் ஜாமீன் கிடையாது என்று உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.