Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓட்டுநர் பணி! 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

#image_title

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓட்டுநர் பணி! 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 13 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வந்துள்ளது. இப்பணிக்கு பிப்ரவரி 13 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.

நிறுவனம் – சென்னை உயர் நீதிமன்றம்(சென்னை)

பணி – ஓட்டுநர்

காலியிடங்கள் – மொத்தம் 13

கல்வித்தகுதி

ஓட்டுநர் பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு, அரசு அங்கீகரித்த கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு வயது 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,500/- முதல் ரூ.71,900/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை

*எழுத்துத் தேர்வு

*செய்முறைத் தேர்வு

*வாய்மொழித் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன் வழி

இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.mhc.tn.gov.in/recruitment/docs/Notification%20No.3%20of%202024%20dt.15.01.2024%20in%20TAMIL.pdf

கடைசி நாள்: 13-02-2024

Exit mobile version