இனி ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம்!! விண்ணப்பிக்கும் வழிமுறை!!

0
210
Driving license online now!! How to Apply!!

18 வயது நிரம்பிய வாகன ஓட்டிகளுக்கு கட்டாயமாக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் ஆனது தற்பொழுது ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. பொதுவாக 2 சக்கர ஓட்டுநர் உரிமம், 4 சக்கர ஓட்டுநர் உரிமம் மற்றும் கனரக ஓட்டுனர் உரிமம் என வாகனங்களுக்கு ஏற்றார் போல் ஓட்டுனர் உரிமங்களும் மாறுபட்டு இருக்கின்றன.

ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் விண்ணப்பிக்கும் முறை :-

✓ மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பரிவஹன் சேவா என்ற இணையதளத்திற்குச் சென்று, ‘License Related Services’ பகுதிக்குச் சென்று, ‘Drivers/Learners License’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

✓ அங்கு வழங்கப்பட்ட பட்டியலில் இருந்து உங்கள் மாநிலத்தைத் தேர்வுசெய்து, Apply for Driving License ஆப்ஷனைக் கிளிக் செய்து, Continue கொடுக்கவும்.

✓ அடுத்து உங்களைப் பற்றிய விவரங்கள், முகவரி மற்றும் பிற தேவையான தகவல்களை நிரப்பவும்.

✓ இப்போது ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 5. அடுத்து அதில் உள்ள டிரைவிங் லைசென்ஸ் டெஸ்ட் ஸ்லாட் தேர்வு செய்யவும். தேதி, நேரத்தை தேர்வு செய்யவும்.

✓ நீங்கள் கொடுத்த தேதியில் ஆர்.டி.ஓ அலுவலகம் சென்று லைசென்ஸ் டெஸ்ட் கொடுத்த பின்ஓட்டுநர் உரிமம் பெறலாம்.