Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சேலம் மாவட்டத்தில் காரை பின்னோக்கி இயக்கி சாதனை! இளைஞர்க்கு குவியும் பாராட்டுகள்!

சேலம் மாவட்டத்தில் காரை பின்னோக்கி இயக்கி சாதனை! இளைஞர்க்கு குவியும் பாராட்டுகள்!

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திர மௌலி.இவர் அவருடைய 10 வயது முதல் காரில் ஏதேனும் ஒரு சாதனை படக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு முழுமையான பயிற்சி பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் கேரளாவில் 30 நிமிடத்தில்  14.2 கிலோ மீட்டர் வரை காரை பின்னோக்கி இயக்கி சாதனை செய்ததை இணையத்தில் பார்த்துள்ளார்.அதனை போலவே தாமும் சாதனை செய்ய வேண்டும் என முயற்சி செய்துள்ளார்.

இதனையடுத்து இன்டர்நேஷனல் வேல்ட் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடிப்பதற்காக எடப்பாடி புறவழிச்சாலையில் காரை பின்னோக்கி ஓட்டி சாதனை படைத்துள்ளார். இதனை எடப்பாடி நகர மன்ற தலைவர் பாஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சந்திர மௌலி காரை பின்னோக்கி இயக்கி ஆலச்சம்பாளையம் புறவழிச்சாலை எல்லை முடிவு வரை சென்று மீண்டும் ஆரம்பித்த புறவழிச்சாலை வரை காரை பின்னோக்கி இயக்கி 29 நிமிடத்தில் 16.6 கிலோமீட்டர் வரை ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

Exit mobile version