திருவண்ணாமலை மீது பறந்த ட்ரோன் கேமரா! ரஷ்ய இளைஞரிடம் வனத்துறையினர் விசாரணை!

0
230

திருவண்ணாமலை மீது பறந்த ட்ரோன் கேமரா! ரஷ்ய இளைஞரிடம் வனத்துறையினர் விசாரணை!

தீபமலையின் மீது ட்ரோன் கேமரா பிறந்ததால் அதை பறக்கவிட்ட ரஷ்ய இளைஞரை வனத்துறை விசாரித்து வருகின்றனர்.

ஆதி சிவன் ஜோதி பிழம்பாக காட்சியளித்ததால் திருவண்ணாமலையே சிவனாக நினைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. இங்கு மாதந்தோறும் பௌர்ணமி நாட்கள் மற்றும் கார்த்திகை தீப நாட்கள் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சியளித்ததால் திருவண்ணாமலையின் உச்சியின் மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது. இங்கு ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் வருவர்.

திருவண்ணாமலை 2668 அடி உயரம் கொண்டது. இந்த மலையின் மீது ரஸ்ய இளைஞர் ஒருவர் ட்ரோன் கேமராவை அனுமதி இன்றி பறக்கவிட்டுள்ளார். ட்ரோன் கேமராவின் மூலம் படம் பிடிக்க வேண்டுமானால் முன்கூட்டியே காவல்துறையிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்பது இந்தியாவில் உள்ள நடைமுறை. அதில் கோவில் போன்ற முக்கிய இடங்களில் ட்ரோன் கேமராக்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை.

இந்நிலையில் ரஸ்ய இளைஞர் ட்ரோன் கேமராவை பறக்க விட்டிருப்பது சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.  இது குறித்து தகவல் வரைந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ரஷ்ய இளைஞரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் எந்த அனுமதியும் இன்றி மலை மீது ட்ரோன் கேமராவை பறக்க விட்டது தெரியவந்தது. எனவே முழுமையான விசாரணைக்கு அவரை வனத்துறை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிரவிசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.