நாடு முழுவதிலும் நிலவி வரும் வறட்சி!! எனவே இந்த உணவுப்பொருள் ஏற்றுமதிக்கு தடை மத்திய மந்திரி அதிரடி!!
நிலவி வரும் வறட்சியால் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. அந்த மாநில முதல்வர் சித்தராமையா துமகூரு என்ற மாவட்டத்தில் உள்ள மதுகிரி பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் அன்ன பாக்கிய திட்டத்திற்காக இந்திய உணவுக் கழகத்திடம் கடிதம் எழுதி இருந்ததாகவும், அதன்மூலம் அரிசியை அவர்களிடம் இருந்து கொள்முதல் செய்ய நினைத்ததாகவும், தெரிவித்தார். இந்திய உணவுக் கழகமும் அரிசி வழங்க தயாராக இருப்பதாக உறுதி கூறி இருந்தனர்.
அந்த அரிசிக்கு ஒரு கிலோவிற்கு ரூபாய் 36 வரை பணம் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருந்தோம். இந்த சூழ்நிலையில் எங்கள் மாநிலத்திற்கு அரிசி வழங்க மத்திய அரசு திடீரென அனுமதி மறுத்துவிட்டது. ஏழைகளுக்கு ஆதரவு என்று பேசி வரும் பாஜக ஏழைகளுக்கு ஆதரவானவர்களா? ஒருபோதும் இல்லை. அவர்கள் ஏழைகளுக்கு எதிரானவர்கள். அரிசியை நாங்கள் இலவசத்திற்கு கேட்கவில்லை ஆனாலும் அவர்கள் பணம் கொடுக்க நினைத்தும் எங்களுக்கு அரிசியை வழங்க மறுப்பு தெரிவித்து விட்டனர்.
இதிலிருந்து அவர்கள் எவ்வளவு கேடானவர்கள்! தீயவர்கள்! என மக்களாகிய நீங்கள் முடிவு செய்ய வேண்டும். ஏழைகளுக்கு இரக்கமற்றவர்களாக, எதிரானவர்களாக அவர்கள் உள்ளனர் என முதல்வர் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் இந்த தகவலை அறிந்த மத்திய நாடாளுமன்ற விவகார துறை மந்திரி பிரகலாத் ஜோஷி இதற்கு பதில் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியை தீயவர் என மக்களிடம் காட்டுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். ஏழ்மையிலிருந்து வந்தவர் என்பதால் பிரதமர் மோடியின் தலைமை மீது காங்கிரஸ் கட்சி பொறாமையாக உள்ளது. அது காந்தி குடும்பத்தின் சொத்து என்று என்றே அவர்கள் நினைத்து வருகின்றனர்.
நாடு முழுவதும் கடுமையான வறட்சி நிலவி வருவதால் குறைந்த அரிசியே இருப்பில் உள்ள நிலையில் அரிசி ஏற்றுமதிக்கு நாங்கள் தடை விதித்துள்ளோம். இதன் காரணமாகவே அரிசி விலையும் உயர்ந்து வருகிறது. கர்நாடகா மட்டுமல்ல பாரதிய ஜனதா கட்சி ஆளக்கூடிய பல மாநில அரசுகளும் கூட அரிசி வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் சூழ்நிலையில் போதிய இருப்பு இல்லாததால் அரிசி வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணம் என்னவென்று தெரியாமல் தீயவர் என்று சொல்லை காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி இருப்பது அதனுடைய செருக்கையே காட்டுகிறது என ஜோஷி தெரிவித்துள்ளார்.