திண்டிவன கை அசைவில் திறந்துவிடப்பட்ட காவிரி ஆட்டம் கண்டது தமிழக டெல்டா!!

0
175
Dr Ramadoss Criticise DMK Leader MK Stalin-News4 Tamil Online Tamil News Channel

திண்டிவன கை அசைவில் திறந்து விடப்பட்ட காவிரி டெல்டா மக்கள் கொண்டாட்டம்

கர்நாடகம் மற்றும் கேரளத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் விளைவாக கர்நாடகத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அடுத்த சில நாட்களில் கர்நாடக அணைகள் நிரம்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், காவிரியில் தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடக அரசு தாமதிப்பதை நேற்று முன் தினம் புள்ளி விவரத்துடன் ராமதாஸ் கண்டித்துள்ளார்.

கர்நாடகம் – கேரளத்திலுள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை அடுத்த சில வாரங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சித்துறை தெரிவித்திருக்கிறது. அதனால், தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 40,000 கன அடி வீதம் தாராளமாக தண்ணீர் திறந்துவிட முடியும். ஆனால், கர்நாடக அணைகளின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இன்று வரை தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படவில்லை. இதையெல்லாம் கண்காணித்து தமிழகத்திற்கு கூடுதல் நீரை திறக்கும்படி ஆணையிட வேண்டிய காவிரி மேலாண்மை ஆணையம் உறங்கிக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதே நிலை நீடித்தால் சம்பா சாகுபடியும் பொய்த்துப் போகும். எனவே, கர்நாடக அரசையும், காவிரி மேலாண்மை ஆணையத்தையும் தமிழக அரசு தொடர்பு கொண்டு தமிழகத்திற்கு காவிரியில் கூடுதல் நீரை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதன்மூலம் தமிழகத்தில் சம்பா நெல் சாகுபடி முழுமையான பரப்பளவில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து கர்நாடகா அணைகளில் கூடுதல் நீர் திறப்பால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று மாலையில் ஒரு லட்சம் கன அடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள முக்கிய நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மைசூர் மாவட்டத்தில் உள்ள 84 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணை முழு கொள்ளளவை அட்டியதால் அணைக்கு வரும் ஒரு லட்சத்து 25,000 கன அடி நீரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதே போன்று மாண்டியாவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து 25,000ம கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா அணைகளில் கூடுதல் நீர் திறப்பால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று மாலையில் ஒரு லட்சம் கன அடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் காவிரி கரையோரத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தைலாபுரத்திலிருந்து கொண்டே கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை புள்ளிவிவரத்தோடு அறிக்கை விட்டு அலறவிட்டுள்ளார் ராமதாஸ் …

உரிமையை மீட்பதில் என்றும் முதல் குறல் கொடுத்து மக்களை தன்பக்கமே வைத்துக்கொள்கிறார் மூத்த அரசியல்வாதி ….

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்