பள்ளிகள் அருகில் போதைப் பொருட்கள் விற்பனை : தேடுதல் வேட்டையில் பள்ளிக் கல்வித்துறை !!

0
139
#image_title

பள்ளிகள் அருகில் போதைப் பொருட்கள் விற்பனை : தேடுதல் வேட்டையில் பள்ளிக் கல்வித்துறை

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அருகில் குட்கா, சிகரெட், புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்கப்படுவதா? என்பது ஆராய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான தனிப்படையும் காவல்துறை தரப்பில் நியமிக்கப்பட்டுள்ளது.

தமிழுக்கு முழுவதும் பள்ளி மாணவர்களும் போதைப் பொருட்களை பயன்படுத்தி தவறான வழியில் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புகையிலை போன்ற போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக தற்போது கிடைப்பதால் மாணவர்கள் இதனை எளிதாக பயன்படுத்த முடிகிறது. இதனை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களிலும் அவர்கள் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு தெரியாமலும் தொடர்ந்து போதைப் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பள்ளிகளுக்கு அருகிலேயே போதிப்பொருட்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறையும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. தமிழக அரசு தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் போதைப் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தி வருவதும் அவர்கள் தவறான பாதைக்கு செல்வதுமாக தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலர் செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அருகில் ஆய்வு செய்யும்படி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

மேலும் தமிழகம் முழுவதும் பள்ளிக்கு அருகில் ஏதேனும் போதை பொருட்கள் என்பது குறித்து காவல்துறையினரும் பள்ளி கல்வி துறை அலுவலர்களும் பள்ளி ஆசிரியர்களும் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தியும் வருகின்றனர் விற்பனை மற்றும் பயன்பாடு குறித்து பயன்பாட்டை ஒட்டி முடிக்க வேண்டும் என தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.