தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைபொருள் பயன்பாடு!! முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு !!

0
213
drug-use-is-increasing-in-tamil-nadu-action-taken-by-chief-minister-stalin

தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைபொருள் பயன்பாடு!! முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு !!

தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பொருள் பயன்பாட்டை ஒடுப்பதற்காக தமிழக அரசு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் போதை பொருள் ஒழிப்பின் எதிராக ஆணையர்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று கேட்கப்பட்டு, போதை பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசித்து வருகின்றனர்.

இந்க ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா மற்றும் தமிழக டிஜிபி மேலும் சென்னை, ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட ஆணையர்களும் பங்கேற்று உள்ளனர்.ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த பின்பு இதனை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு மிக அதிகமாக இளைஞர்களால் பயன்படுத்தப்பட்டு வருவதாக நிறைய குற்றச்சாட்டுகள் அதிகரித்து வந்து கொண்டிருக்கின்றன, இதற்கு சான்றாக அண்மையில் கூட மதுரையில் கஞ்சா போதை பயன்படுத்தி வந்த கும்பலால் பைக்கில் வந்த நபர் மீது கொடூர தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்களை தடுப்பதற்காக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

மேலும் தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்து வரும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன நேற்று கூட சென்னையில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்ட பொழுது ஐடியில் பணிபுரியும் ஊழியரை விசாரணை மேற்கொண்டதில் அவரிடம் ரூபாய் 1.5 கோடி மதிப்பிலான கஞ்சா பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அந்த இளைஞரையும் கைது செய்துள்ளனர்.

சினிமா வட்டாரத்தில் கூட போதை பொருள் புழக்கம் அதிகளவில் உள்ளதாக நேற்று பாடகி ஒருவர் கூறியது மேலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே தமிழகம் போதை பொருள் மாநிலமாக மாறிவிட கூடாது என்ற அச்சத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதிரடியான முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.