Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரூ.2.45 கோடி செலவில் முருங்கை பதப்படுத்தும் மையம் ரெடி..! விவசாயிகள் மகிழ்ச்சி!!

வேடசந்துார் தாலுகா சேணன்கோட்டையில் முருங்கை கீரை, முருங்கைக்காய் பதப்படுத்தும் மையம் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.

திண்டுக்கல்: வேடசந்துார் மற்றும் குஜிலியம்பாறை தாலுகா பகுதியில் விவசாயிகள் அதிகமாக முருங்கை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். சீசன் நேரங்களில் நல்ல விலை கிடைக்காமல் போவதோடு, வியாபாரிகள் கேட்கும் விலைக்கே, விற்கும் அவலத்திற்கு விவசாயிகள் ஆளாகின்றனர். இதை தவிர்க்க,சீசன் இல்லாத நேரங்களிலும் காய்களை விற்க வசதியாக, சேமிப்பு கிடங்கி கட்டித்தர கோரிக்கை எழுந்தது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு முருங்கை, தக்காளி, வாழைப்பழம், வெங்காயம் போன்றவற்றுக்கு சேமிப்பு கிடங்குகளை கட்டி வருகிறது. இதன் மூலம் காய் சீசன் இல்லாத நேரங்களிலும் குறைந்த விலைக்கு காய்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், நல்ல லாபமும் கிடைக்கும்.

இவ்வாறு வேடசந்துார் சேணன்கோட்டையில், வேளாண் விளைபொருள் விற்பனை வாரியம் மூலம் ரூ.2.45 கோடி செலவில் முருங்கை பதப்படுத்தும் மையம் கட்ட திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் வேடசந்துார் மற்றும் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் தாலுகா பகுதி விவசாயிகள் முருங்கைக்காய், கீரை போன்றவற்றை இங்கு சேமித்து வைத்து விலையேற்றத்திற்கு ஏற்ப விற்பனை செய்யலாம். மேலும், முருங்கை கீரையை காயவைத்து பவுடராக்கி ஏற்றுமதியும் செய்யலாம். இதனால் விவசாயிகள் முருங்கை விவசாயத்தில் லாபம் அடையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது முருங்கை பதப்படுத்தும் மையத்தின் கட்டுமான பணிகள் முடிந்து திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Exit mobile version