Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண் காவல் ஆய்வாளரிடம் உடன்பிறப்பு செய்த செயல்! நடவடிக்கை எடுக்குமா தலைமை?

பெண் காவல் ஆய்வாளரிடம் உடன்பிறப்பு செய்த செயல்! நடவடிக்கை எடுக்குமா தலைமை?

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த தினத்தில் இருந்து அந்தக் கட்சியை சார்ந்த பிரமுகர்களின் வரையறை எல்லை மீறிக் கொண்டு இருக்கிறது. பல இடங்களில் அந்த கட்சியை சார்ந்தவர்கள் பிரச்சினையில் ஈடுபடுகிறார்கள் சென்னையில் அம்மா உணவகம் தாக்கப்பட்டது மற்றும் நாகை மாவட்டத்தில் மினி கிளினிக் தாக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து வரிசையாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

இதற்கிடையில் பூந்தமல்லி பெருமாள்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கொரோனா நிதி கொடுக்கப்படுவதை ஆய்வு செய்ய நியாயவிலை கடைக்கு வருகை தந்த போது அங்கே கூடியிருந்த திமுகவை சேர்ந்தவர்கள் அவரை சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள். இதனால் அவர் காவல்துறையில் புகார் செய்திருக்கிறார். அதன் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது இதே போன்று ஒரு சம்பவம் திருப்பூர் பகுதியில் நடைபெற்று இருக்கிறது. தமிழகம் முழுவதும் நோய் தோற்று இரண்டாவது அறையில் மிக வேகமாக பரவி வருகிறது. பத்து வருடங்களுக்கு பின்னர் ஆட்சி புரிந்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகம் இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது ஆட்சிக்கு வந்தவுடன் துறை சார்ந்த ஆட்சியாளர்களை நிர்வாகம் செய்வது திட்டமிடுவது போன்று ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்த்து பார்த்து செய்து விடுகிறார் ஸ்டாலின். இதன் காரணமாக பொதுமக்கள் இடையே தற்போது நற்பெயர் ஏற்பட்டிருக்கிறது அவருக்கு அவருடைய செயல்பாடுகள் குறித்து எதிர்கட்சியினரும் பாராட்டுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த சூழ்நிலையில் தமிழக அரசு சார்பாக மே மாதம் பத்தாம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரையில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு போடப்பட்டிருக்கிறது ஞாயிற்றுக்கிழமைகளில் உடலுறவுபடங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது நோய்த்தொற்றின் இரண்டாவது மிக பயங்கரமாக இருப்பதால் அதனைக் கட்டுப் படுத்துவதற்கும் இரவு பகல் பாராமல் மகனுக்கு ஸ்டாலின் அவர்கள் அமைச்சராகவும் கடுமையாக உழைத்து வருவதாக சொல்லப்படுகிறது தமிழகம் முழுவதிலும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றும் வாகன ஓட்டிகள் மற்றும் மனிதர்களை விதி மீறலுக்காக அபராதம் வசூலிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், ,திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் பகுதியில் அவினாசி பாளையம் காவல் ஆய்வாளர் கோமதி தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த சமயத்தில் திமுகவைச் சார்ந்த பொங்கலூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரவி என்பவர் தன்னுடைய நண்பர்களுடன் குடிபோதையில் காரில் வந்திருக்கிறார்.

காரை நிறுத்தி வாகன சோதனை செய்த காவல்துறையினர் முக கவசம் அணியாமல் அமர்ந்திருந்த ரவியிடம் முக கவசம் அணியாமல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி ஏன் வெளியே சுற்றுகிறார்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

குடிபோதையில் இருந்த திமுக பிரமுகர் ரவி பெண் காவல் ஆய்வாளர் கோமதி இடம் நாங்க ஆட்சிக்கு வந்துவிட்டோம் கேஸ் போடணும்னா போட்டுக்கோங்க என தன்னுடைய வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அவருடன் வருகைதந்த நண்பர்கள் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனாலும் ரவி ஆபாச வார்த்தைகளால் தன்னுடைய நண்பர்களையே திட்டி விட்டு மறுபடியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.

அவரை எப்படியோ சமாதானம் செய்து காரில் அமர வைத்து அவருடைய நண்பர்கள் அழைத்துச் சென்றார்கள் இவர்களைப் போன்றவர்களை தலைமை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் இதுபோன்ற அவப்பெயர் திமுகவிற்கு வந்து கொண்டுதான் இருக்கும்.

Exit mobile version