Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

 பேசி கொண்டிருந்தவரை சரமாரியாக வெட்டிவிட்டு ஓடி சென்ற குடி போதை ஆசாமி!! காரணம் என்ன ?

Drunken assailant ran away after slashing the person who was talking!! What is the reason?

Drunken assailant ran away after slashing the person who was talking!! What is the reason?

 பேசி கொண்டிருந்தவரை சரமாரியாக வெட்டிவிட்டு ஓடி சென்ற குடி போதை ஆசாமி!! காரணம் என்ன ?

நெல்லையடுத்த  சீதபற்பநல்லூர் அருகேவுள்ள புதூர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் தான்  சுடலைமுத்து இவருடைய வயது அறுபது .இவர் நேற்று இரவு சுடலைமுத்து தனது வீட்டின் முன்பு நின்று உறவினரிடம்  பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது  அதேஊரை சேர்ந்த மேலத்தெருவில் வசிக்கும் கோபாலகிருஷ்ணன் இவருடைய வயது முப்பத்தைந்து.மது குடித்து விட்டு அவ்வழியாக வந்தார். மதுபோதையில் இருந்த அவர் திடீரென தன சட்டையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சுடலைமுத்துவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து  தப்பியோடினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து  சரிந்து விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டுநெல்லை  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.பின் அவருக்கு  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்விசாரணையில் கோபாலகிருஷ்ணன் அந்த அப்பகுதியிலுள்ள  ஒரு குளத்தில் இரவு நேரங்களில் மீன்களை திருடி விற்று வந்துள்ளார். இதனை குத்தகை எடுத்தவர்கள் சுடலைமுத்துவிடம் கூறி உள்ளனர்.

இதனால் அவர் கோபாலகிருஷ்ணனை கண்டித்த ஆத்திரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது என தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான கோபாலகிருஷ்ணனை போலீசார் வலைவீசி  தேடி வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

Exit mobile version