பெண்களுக்கு அதிகளவில் ஏற்படும் உலர் கண் நோய்!!! இதை குணப்படுத்த சில வழிமுறைகள் இதோ!!!

0
97
#image_title

பெண்களுக்கு அதிகளவில் ஏற்படும் உலர் கண் நோய்!!! இதை குணப்படுத்த சில வழிமுறைகள் இதோ!!!

பெண்களை அதிக அளவில் பாதிக்கும் உலர் கண் நோயை குணப்படுத்த சில எளிய வழிமுறைகள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய கண்களில் வெளிப்புற அடுக்கு, மைய அடுக்கு, உள் அடுக்கு என்று மூன்று அடுக்குகள் உள்ளது. இதில் வெளிப்புற அடுக்கில் எண்ணெய் உள்ளது. மைய அடுக்கில் நீர் உள்ளது. உள் அடுக்கில் புரதம் உள்ளது. இந்த மூன்று அடுக்குகளில் உள்ள தரம் அல்லது அளவில் ஏற்படும் மாற்றங்கள் தான் உலர் கண் நோய் என்று அழைக்கப்படுகிறது.

உலர் கண் நோய்க்கான அறிகுறிகள்…

நமது கண்களில் வறட்சி, அரிப்பு, வலி, எரிச்சல், கனம், கண்களில் நீர் வடிதல் போன்றவை உலர் கண் நோய் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும். மேலும் மங்கலான பார்வை, எதையாவது பார்ப்பதில் படிப்பதில் சிரமம் ஏற்படுவதும் உலர் கண் நோய் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

உலர் கண் நோயை குணப்படுத்துவதற்கான வழிமுறைகள்…

* உலர் கண் நோய் இருப்பவர்கள் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

* கண் பயிற்சிகளை பயிற்சியாளர்களின் வழிகாட்டுதல் படி செய்ய வேண்டும்.

* நீங்கள் இருக்கும் அறையில் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். இதன் மூலம் அறையில் இருக்கும் காற்றை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவி செய்கின்றது.

* உலர் கண் நோய் இருப்பவர்கள் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை குளிர்ந்த நீரை பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும்.

* உலர் கண் நோய் இருப்பவர்கள் கண்களுக்கு ஓய்வு கெடுக்க வேண்டும். 10 விநாடிகளுக்கு ஒரு முறை கண்களை சிமிட்டுவது நல்லது.

* உலர் கண் நோய் இருப்பவர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் வெளியில் செல்லும் பொழுது சன் கிளாஸ் அணிந்து கொள்வது கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்.

* உலர் கண் நோய் இருப்பவர்கள் அதிகம் வெப்பநிலை உள்ள இடங்களிலோ அல்லது குளிர்ந்த தன்மை உள்ள இடங்களிலோ அதிக நேரம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

* அது மட்டுமில்லாமல் நேரடியாக கண்களில் காற்று படுவதற்கு ஏதுவாக இருப்பதை தவிர்ப்பது கண்களுக்கு நல்லது.

* உலர் கண் நோய் உள்ளவர்கள் அடிக்கடி ஆவி பிடிப்பது, சாம்பிராணி புகை போடுவது போன்றவற்றை செய்வதை தவிர்க்க வேண்டும்.

* கண்களுக்கு விட்டமின் சி சத்துக்களை அளிக்கும் உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.