தமிழக அரசின் சொந்த நிறுவனம் தான் ஆவின்.நிறத்திற்கு தகுந்தாற்போல் அதில் உள்ள கொழுப்பு சத்து பச்சை,நீளம்,சிகப்பு என வரையறுக்கப்பட்டு விற்பனை செய்கிறது ஆவின் நிறுவனம். இவற்றில் நீல பால் பாக்கெட் நிறம்(டோன்டு)குறைந்த கொழுப்பு சத்துடையது,பச்சை நிற பால் பாக்கெடுகள் சற்று நடுத்தரமான கொழுப்புசத்துடையது.,இதில் ஆரஞ்சு அதாவது கோல்டு எனப்படும் பால் வகையானது அதிக கொழுப்புச்சத்துள்ள பால் பாக்கெட்டாகும்
சிறு மற்றும் குறு வியாபாரிகள் அதிகம் விற்பனை செய்யும் பச்சை நிற பால் பாக்கெட்டிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இந்த பச்சை நிற பாக்கெட் லிட்டருக்கு ரூ.3 விலை குறைத்து லிட்டர்ரூ.44 என விற்பனையாகிவருகிறது.
இதனால் ஆவின் நிறுவனத்திற்கு லிட்டருக்கு ரூபாய் 7 இழப்பு ஏற்படுகிறது.இதன் காரணமாக பச்சை பால் பாக்கெட் உற்பத்தி மற்றும் உற்பத்தி குறைக்கப்பட்டது இதற்கு மாறாக ஊதா நிற பால் பாக்கெட்டுகள் உற்பத்தியை அதிகரிக்கவும்,பச்சை நிற பால் பாக்கெட்களின் உற்பத்தியை 70 விழுக்காடு குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது.
இதனை கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் அரசு ஆவின் நிறுவனம் விற்பனையை எவ்வித முன்னறிவிப்புமின்றி 50 விழுக்காடு குறைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆவின் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு கூறியிருந்தது.பச்சை நிற பால்பாக்கெட் இழப்பீட்டை சரி செய்ய டோன்டு மில்க் எனப்படும் சமன்படுத்தப்பட்ட நீல நிற பாக்கெட்டுகள் உற்பத்தி அதிகரிக்கவுள்ளதாகவும் தகவல் தெரியவந்தது.